சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் ‘விலை’ நிலங்களாகும் ‘விளை’ நிலங்கள்!

Read Time:14 Minute, 38 Second
சென்னை பெருநகர எல்லை 1189 சதுர கி.மீ பரப்பளவில் இருந்து 8878 சதுர கி.மீ பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுவது விவசாயிகளை அச்சம் அடைய செய்து உள்ளது.

எல்லை விரிவாக்கம் நகர்வு ஏற்கனவே கடன்பட்டுள்ள விவசாயிகளை அவர்களுடைய விவசாய நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளும், அவர்கள் ஆசைவார்த்தைகளுக்கு பலியாக நேரிடும். விவசாயம் இப்பகுதிகளில் இன்னும் இருந்து வருகிறது, இப்போது நகரமையமாக்கல் என்பது முற்றிலுமாக விவசாயத்தை அளித்துவிடும். ஆயிரக்கணக்கான விவசாயிகளை வேலையற்றவர்களாக்கும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் வரை சென்னை பெருநகர குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு ஜனவரி 5-ம் தேதி வெளியிட்டது.  

1974–ம் ஆண்டு சட்ட ரீதியான அமைப்பாக சி.எம்.டி.ஏ செயல்பட தொடங்கியபோது, சென்னை பெருநகர எல்லை 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பெருநகர எல்லையில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இப்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்துவரும் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 2 மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி தாலுகா பகுதிகளும் இணைக்கப்படுகிறது. மொத்தம் 1709 சிறு கிராமங்கள் சிஎம்டிஏவின் விரிவுபடுத்தப்பட்ட எல்லைக்குள் வருகின்றன. இதன் மூலம் சிஎம்டிஏ எல்லை 7 மடங்கு பெரிதாகிறது. 
 
சென்னையில் தொடர்ந்து மக்கள்தொகை பெருகி வருகிறது. அதன்படி வருகிற 2026-ம் ஆண்டில் மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற விரிவாக்கம் நடைபெறுகிறது.
 
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வரையில் சென்னை பெருநகரத்தின் விரிவாக்கம் செய்யப்படுவதால் அந்தப் பகுதியில் வீடுகள் வாங்குவது மேலும், அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவையனைத்தும் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமானதாக இருக்கும் என்றே பார்க்கப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம் பெருநகர மாநகராட்சி எல்லைக்கு இணையாக இருக்கும் என்ற நிலையில் மக்கள் நலத்திட்டங்களை விரைவாக அந்த பகுதிகளில் பெற இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையின் புறநகர் பகுதிகளாக இருந்து வரும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் உள்ளடங்கிய பகுதிகளை சென்னை பெருநகர எல்லையாக விஸ்தரிக்கும் போது மக்கள் பயன் அடைகிறார்களோ என்னவோ ரியல் எஸ்டேட் தொழில் பயனடையும். சென்னையை சுற்றிலும் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வீடுகளாகிவிட்டது. இப்போது எல்லை விஸ்தரிப்பு என்பது எந்த வகையில் பயன்தரும் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. விரிவாக்கம் அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னதாகவே புறநகர் பகுதிகளில் விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாகியது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. 

இப்போது சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் என்பதில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் உற்சாகம் அடைந்து உள்ளது என்பதுதான் உண்மையாகும். ஆனால் இப்பகுதியில் விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் நிலையானது இப்போது பெரும் அச்சம் சூழ்ந்ததாகவே உள்ளது. நெல் விளையும் பூமியும் பிளாட் நிலமாகி வருகிறது. பிற மாவட்ட விவசாயிகளை ஒப்பீடுகையில் சென்னையை சுற்றிய புறநகர் விவசாயிகளின் நிலையானது மாறுதலுக்கு உட்பட்டது. அதாவது எளிமையான முறையில் அவர்களால் விளைப்பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்ற நன்மையை பெற்று உள்ளது. ஆனால் இப்போது பெருநகர எல்லை விஸ்தரிப்பு இப்பகுதியில் இப்போதே அல்லது பினனரோ விவசாயத்தை மூழ்கடித்துவிடும்.

புறநகரங்களில் மக்கள் நல்ல விலை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை விற்பனை செய்யும் நிலையை பார்க்கிறோம். இப்போது கடன்பட்டு உள்ள விவசாயிகள் எளிதாக தங்களுடைய நிலத்தை நல்ல விலையில் விற்பனை செய்ய நேரிடும். “விவசாயிகள் தங்களுடைய நிலத்திற்கு நல்ல விலை கிடைத்தால் அதனை விற்பனை செய்துவிடுவார்கள், இப்போது விவசாயம் லாபம் கொடுக்கும் நிலையில் இல்லை,”எனவும் விவசாயிகளே கூறும் நிலை காணப்படுகிறது. 

ஏப்ரல் 20-ம் தேதி காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்டும் கூட்டத்தில் கலந்துக்கொண்ட சில விவசாயிகள் கலந்துக்கொண்டார்கள். அவர்களில் ஒருவரான விவசாயி நேரு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசுக்கு பேசுகையில், “கூட்டத்தில் 200 பேர் பங்கேற்றார்கள், அவர்களில் பெரும்பாலானோர் கட்டிடம் கட்டுபவர்கள்தான், பிறர் அரசு அதிகாரிகள். சிலர் மட்டுமே பொதுமக்கள்,” என்கிறார். 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின், சுற்றுச்சூழல் தகவல் மையத்தின் தரவுப்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 47 சதவித மக்கள் விவசாய தொழில் செய்பவர்கள். இப்போது வரையில் மாவட்டத்தில் நிலத்தடி நீர் உதவியுடன் பெரும்பாலான பகுதியில் முப்போகம் விளைகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் விவசாயம் செய்தவற்கு சரியான இடமாக இருந்து வருகிறது, விவசாயமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மட்டுமே வறட்சியை எதிர்க்கொள்ளும் நிலையை மாவட்டம் கொண்டு உள்ளது. இப்போது மாவட்டத்திற்கு தேவையானது 
 சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் கிடையாது அரசிடம் இருந்து உதவிமட்டும்தான் என்கிறார்கள் விவசாயிகள். 
 
2016-ம் ஆண்டு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. வறட்சியால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போன விவசாயிகளே பெரும்பாலும் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. 2017 ஜனவரியில் IndiaSpend வெளியிட்ட செய்தியில் ஒரு மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களிலும் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டனர், ஆனால் சில மாவட்டங்களில் வறட்சி என அறிவித்த தமிழக அரசு தற்கொலை கிடையாது என்று மூடிமறைத்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் அகாராம் கிராமத்தில் 2017 ஜூன் மாதம் 8 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் 47 வயதான விவசாயி சந்திரசேகரன் தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவருடத்திற்கு ரூ. 90000 என 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அவர் தற்கொலையை அடுத்து அவருடைய குடும்ப நிலையானது அப்படியே மாறியது. அவருடைய மனைவியும்,  பெண் குழந்தையும் வாழ்வை தேடி சென்னையை நோக்கி வந்தார்கள். இப்போது வரையில் அவர்களுக்கு நிவாரண நிதி ஏதாவது கிடைத்தது என்றால் கிடையாது. 

இதுதொடர்பாக விவசாயி சந்திரசேகரின் மனைவி சாந்தி பேசுகையில், “நாங்கள அதிகாரிகளிடம் பேசுகையில் என்னுடைய கணவர், தனிப்பட்ட காரணத்திற்காக தற்கொலை செய்துக்கொண்டார், விவசாய கடனால் கிடையாது என நிராகரித்துவிட்டனர்,” என்று கூறிஉள்ளார். இப்போது வரையில் கடனை அடைக்க சாந்தி சென்னையில் வீட்டு வேலை செய்து வருகிறார்.  

லாப வீழ்ச்சியை தடுக்கவும், விவசாய கடனை தள்ளுபடி செய்து அரசு உதவிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கும் நிலையில் இப்போது சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் என்பது விவசாயிகளை விவசாய தொழிலை கைவிடும் நிலைக்கே தள்ளும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் கொண்டு உள்ள தகவலின்படி 1,98,543 ஹெக்டேர்கள் பயிர் விளையும் பூமியாக உள்ளது, இதில் 1,45,966 ஹெக்டேர்கள் நெற்பயிர் விளையும் பூமியாகும். இதேபோன்று பரந்துவிரிந்த விவசாய நிலங்களை கொண்ட திருவள்ளூர் மாவட்டமும் சென்னை பெருநகர எல்லை விரிவாக்கத்தின் கீழ் வருகிறது. சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் இறுதி செய்யப்பட வேண்டும் என்றாலும், சமீபத்தில்தான் பொதுமக்களிடம் கருத்து பெறப்பட்டது. 

நிலங்களின் விலையானது விண்ணத்தொடும் என்பது ஏற்கனவே விவசாயிகளை நிலங்களை விற்பனை செய்யயும் நிலைக்கும், விற்பனையை எதிர்பார்க்கும் நிலைக்கும் தள்ளிஉள்ளது என பிரந்திய விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

மிகப்பெரிய ரியல் எஸ்டேட் இன்வஸ்டர்கள் பெருமளவு இடங்களை வாங்கி, அவற்றில் 5 ஆண்டுகளாக பயிர்செய்யாமல் வைத்து உள்ளார்கள், விவசாய நிலைத்தை பிற நோக்கத்திற்காக இவ்வாறு செய்கிறார்கள் எனவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
 
நகரம் ஏற்கனவே விரிவடைந்து வரும் நிலையில் அரசின் முன்நகர்வும் விவசாயத்தை பெரிதும் பாதிக்கும், விளை நிலங்கள் அனைத்தும் விலை நிலமாகும் என்ற அச்சமானது விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் தொடர்ந்து சுருங்கிக்கொண்டே வருகிறது. இப்போது எல்லை விரிவாக்கம் என்ன நிலைக்கு கொண்டு செல்லும்? என்றே அவர்களுடைய கேள்வியாகவும் உள்ளது. “அரசின் நகர்வில் நோக்கம் என்ன என்வென்று தெரிய எந்தஒரு வெளிப்படைத்தன்மையும் கிடையாது. விவசாயிகள் அவர்களுடைய நிலத்தை விற்பனை செய்தால் சாப்பிட என்ன செய்வார்கள்?” என விவசாயி நேரு கேள்வியை எழுப்பி உள்ளார். 
 
எல்லை விரிவாக்கம் ஏற்கனவே கடன் பட்டுள்ள விவசாயிகளை அவர்களுடைய விவசாய நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளும், அவர்கள் ஆசைவார்த்தைகளுக்கு பலியாக நேரிடும். விவசாயம் இப்பகுதிகளில் இன்னும் இருந்து வருகிறது, இப்போது நகரமையமாக்கல் என்பது முற்றிலுமாக விவசாயத்தை அளித்துவிடும். ஆயிரக்கணக்கான விவசாயிகளை வேலையற்றவர்களாக்கும். விவசாயிகள் தரப்பில் அரசின் நகர்வில் வெளிப்படைத்தன்மை தேவையெனவும், நகரமையமாக்கல் வேண்டாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது. ஏற்கனவே 2011-ல் காஞ்சீபுரம் நகராட்சியில் கிராம பஞ்சாயத்து இணைக்கப்பட்ட போது, விவசாயிகள்தான் பாதிக்கப்பட்டார்கள் எனவும், அவர்களுக்காக எந்தஒரு நகர்வும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

நெற்பயிர்கள் விளையும் நிலங்கள் மொத்தமாக வாங்கப்பட்டு அவற்றின் பாசன வசதிகள் தடுக்கப்பட்டு பின்னர் விலை நிலமாக தமிழகம் முழுவதும் ஆகி வருகிறது. காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டும் விலக்கு கிடையாது. கணிசமான மழை, நிலத்தடி நீர் காரணமாக இரு மாவட்டங்களிலும் விவசாயம் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பாகவே உள்ளது. விவசாயிகள் விளைப்பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் நன்மையும் பெற்று உள்ளார்கள். விளை நிலங்கள் சுருங்கி வருவதை தடுக்க அனைத்து தரப்பிலும் நடவடிக்கையானது அவசியம். நெல் விளையும் பூமி ரியல் எஸ்டேட் காரர்களின் விலை பூமியாகுவதை தடுக்க நடவடிகையானது மிகவும் அவசரமாக தேவை. 

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு, இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு என முன்நகரும் நாம் இப்போது நம் கண் எதிரே விலை நிலமாக செல்லும் விளை நிலங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. நெல் விளையும் பூமியை காப்பாற்ற வேண்டும், அதற்கு நம் தரப்பில் இருந்தும் நடவடிக்கை அவசியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *