சூர்யாவுடன் இணையும் மோகன்லால்!

Read Time:3 Minute, 42 Second
Page Visited: 74
சூர்யாவுடன் இணையும் மோகன்லால்!
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் சூர்யா பிசியாக இருக்கிறார். சூர்யா அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். 

கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது.

இப்போது சூர்யா37-ல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.

சூர்யா படத்தில் மோகன்லால் நடிக்கிறார் என்பதை இயக்குநர் கே.வி. ஆனந்த் மற்றும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

மோகன்லாலுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஜில்லாவில் தளபதி விஜயுடன் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது, அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். மலையாளத்தில் சூப்பர் ஹிட் கொடுத்துவரும் மோகன்லால் படத்தில் இணைந்தது, படத்தின்மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது. மோகன்லாலை சந்தித்து பேசியதாகவும், அவரிடம் இருந்து சாதகமாண பதில் கிடைத்ததாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது. சூர்யாவுடன், மோகன்லால் இணைந்து இருப்பதால் ஜில்லா ஜோடியை போன்று ஒரு மாஸ் ஜோடியாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது. படத்தில் இருவருக்கும் முக்கியமான மற்றும் வலுவான பாத்திரம் இடம்பெறுகிறது. மோகன்லால் வில்லனாக மிரட்டலாம் எனவும் உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
 இருவரின் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் காட்சியமைப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அயன், மாற்றான் படங்களுக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கே.வி. ஆனந்துடன் இணைகிறார். படத்தின் 4 பாடல்கள் தயாராகி விட்டதாகதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி, ஐதராபாத் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இப்படத்துக்கு, எழுத்து - பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்து இயக்குனர் கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளர் - கேவ்மிக் யு அரி மற்றும் கலை - கிரண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா வாரியர்? 

கண்ணசைவு மூலம் புகழ் பெற்ற பிரியா வாரியர் இப்படத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *