அரவிந்த் சாமி, சூர்யா , விஜய், விஜய் சேதுபதியிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா? அமலாபால் காட்டம்

Read Time:3 Minute, 30 Second

சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அமலாபால் நடித்து உள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டி – நயன்தாரா நடித்து வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக்தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

இந்த படத்தில் அரவிந்த் சாமி – அமலாபால் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக நடித்து உள்ளனர். பைனான்ஸ் பிரச்சினையால் படம் வெளியிடும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அமலாபாலிடம், ‘இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தது’ தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தது உங்களின் ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படாதா? என்று கேள்வி எழுப்பியதும், உடனடியாக பதிலளித்த அமலாபால், நடிகைகளிடம் மட்டும் இதுபோன்ற கேள்வி கேட்கப்படுகிறது என்பது தெரியவில்லை. அரவிந்த் சாமி, சூர்யா, விஜய், இளம் நடிகர் விஜய் சேதுபதியிடம் பெற்றோரா நடிப்பது தொடர்பாக கேள்வி கேட்ப்பது கிடையாது. ஆனால் அவர்களிடம் இதையெல்லாம் கேட்காமல் நடிகைகளிடம் மட்டும் கேள்வி கேட்கிறீர்கள், பெரிதுபடுத்திப் பார்க்கிறீர்கள்? என்று பதில் கேள்வியை எழுப்பினார்.

நாங்களும் ஒரு நடிகர்தான், என்னிடம் ஒரு இயக்குநர் கதை சொல்லும் போது, என்னுடைய கேரக்டருக்கு குழந்தை இருக்கா, இல்லையா என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். அதற்கு பின்னால் ஒரு கதையிருக்கிறது. ‘அம்மா கணக்கு’ படத்துக்குப் பிறகு இதுபோன்ற கதையில்தான் இனி நடிப்பீர்களா? என்று என்னிடம் நிறைய பேர் கேள்விகளை கேட்டார்கள். ஆனால் பாருங்கள் அதன்பிறகு நான் அப்படியே நடிக்கவில்லையே. முழுவதும் வேறு வேறான வேடங்களில்தானே நடித்தேன். அப்படி எதுவுமே கிடையாது, இதுபெரிய விஷயமே கிடையாது. இது ஒரு படம், கலை. ஒருபடம் உருவாக்கப்படுகிறது. அதில் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் பார்ப்பது கிடையாது. இது தவறான கேள்வி, தவறான நம்பிக்கையும் கூட. நடிகைகளிடம் மட்டுமே இதுபோன்று கேட்பது முழுவதும் தவறான விஷயம் என கூறிஉள்ளார் அமலாபால்.

மேலும் பேசுகையில், முதல்கட்ட யோகாக்களை செய்து வருகிறேன். தலைகீழாக நின்று சிரசாசனம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் இருந்தது, முயற்சி செய்துக்கொண்டு இருந்தேன், கடைசியாக அதனை முடித்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நிலையில்தான் இமயமலை செல்வது தொடர்பாக முடிவு செய்தேன், அங்கு சென்றுயிருக்கவில்லை என்றால் இப்போது ஒரு மனிதராக நான் இங்கு இருக்க முடியாது. இயமலை எனக்கு கடவுள் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *