இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ செயற்கைக்கோள்கள் மூலமான ஆய்வில் தகவல்

Read Time:3 Minute, 34 Second
Page Visited: 74
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ செயற்கைக்கோள்கள் மூலமான ஆய்வில் தகவல்
இந்தியாவில் பயிர்களுக்கான நீர்பாசனத்திற்கு நிலத்தடி நீரை எடுப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது என நாசா ஆய்வில் தெரியவந்து உள்ளது.  

நாசா கோடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டர் விஞ்ஞானிகள் குழு உலக அளவில் நிலத்தடி நீர்மட்டம் மாற்றம் மற்றும் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தது. இதுதொடர்பான ஆய்வு கட்டுரை Nature பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது.

மனித நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கையின் சூழற்சி உள்ளிட்ட காரணங்களால் பூமியில் ஈரப்பதம் மிகுந்த பகுதிகள் மேலும் ஈரமாகவும், உலர்ந்த பகுதிகள் மேலும் உலர்ந்து கொண்டே போவதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வடக்கு, கிழக்கு பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இதனால் ஏற்கனவே பிரச்சினைகள் உருவாகி இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தி கார்டியன் செய்தி வெளியிட்டு உள்ளது. வட இந்தியாவில் நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்காக நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது, இதனால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஆய்வும் மேற்கொள்ளப்பட்ட நாட்களில் வட இந்தியாவில் போதுமான பருமழை இருப்பினும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

வழக்கமான மழைப்பொழிவு காரணப்பட்டாலும் நிலத்தடிநீரை மீட்டெடுக்கும் வகையில் காணப்படவில்லை, பூமியை பொறுத்தவரை நிலத்தடி நீரே மிகவும் அத்தியாவசிய வளமாகும். இது எதிர்கால வறட்சிக்கு நல்லதல்ல என விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளார்கள். அமெரிக்கா/ஜெர்மனி தலைமையிலான  Gravity Recovery and Climate Experiment (GRACE) செயற்கைக்கோள் உலகில் 34 இடங்களில் நிலத்தடி நீரின் மாற்றம் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்கிறது, 14 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு உள்ளது. விஞ்ஞானி மாத் ரோடெல் பேசுகையில், “பல்வேறு செயற்கைக்கோள்கள் தகவல்களை கொண்டு பூமியின் அனைத்து பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக முதல் முறையாக ஆய்வை மேற்கொண்டு உள்ளோம்,” என குறிப்பிட்டு உள்ளார். 

பூமியை பொறுத்தவரையில் நிலத்தடி நீர்மட்டம் என்பது குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு மிகவும் அத்தியாவசியமான வளமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *