உடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நடைப்பயிற்சி!

Read Time:8 Minute, 22 Second
Page Visited: 263
உடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நடைப்பயிற்சி!
உடல் எடையை குறைக்கவும், சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் நடைப்பயிற்சி மிகவும் சிறந்த பயிற்சியாகும் இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜிம்மிற்கு சென்று வெவ்வேறு விதமான எடையை தூக்கமுடியவில்லையா? யோகாவிற்கு செல்ல பொறுமையில்லையா? உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
“காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு, என்று வழக்கப்பபடுத்திக் கொள்ளு பாப்பா” என்று பள்ளியில் நாம் படித்த பாரதியின் பாடல் குழந்தைகளுக்கானது மட்டும் கிடையாது, முதியவர் வரைக்கும் பொருத்தமானது.
மிகவும் நேரம் எடுக்கும் என உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும், யோகா செய்ய முடியாதவர்களுக்கும் நடைப்பயிற்சி சிறப்பானது.
உடல் எடையை குறைக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. பெரும்பாலான டாக்டர்களின் அறிவுரையும் இதுவாகவே உள்ளது.
டெல்லி ஸ்ரீபாலாஜி அக்‌ஷன் மெடிக்கல் கல்லூரியின் கார்டியலஜிஸ்ட் டாக்டர் அமர் சிங்கால் பேசுகையில், “நடைபயிற்சி சரியான உடற்பயிற்சிக்கு நெருங்கிய செயல்பாடாக கருதப்படுகிறது. உடலின் செயல்பாடு மற்றும் உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் மிகவும் எளிதான வழியாகும். இது மிகவும் பிரபலமானதும், அனைவரும் அணுகக்கூடியது, காயம் என குறைந்த அளவு ரிஸ்கையே கொண்டது,” என்கிறார். நடைப்பயிற்சிக்கு என்று தனியாக எந்தஒரு பயிற்சியும் தேவையில்லை, சிறப்பு திறனும் தேவையில்லை, உபகரணங்களும் தேவையில்லை, சிறப்பு வசதிகள் மற்றும் அதற்கான ஆடைகளும் தேவையில்லை. இதனை உடலுக்கு ஏற்ற வகையில் வேகமாகவோ, மிதமாகவோ மேற்கொள்ளலாம்.
உங்களுடைய வயதை பற்றியெல்லாம் ஒன்றும் நினைக்க வேண்டாம், அனைவருமே இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
மும்பை ஃபோர்டிஸ் எஸ்எல் ராஹீஜா மருத்துவமனை நீரிழிவு மருத்துவர் அணில் போராஸ்கர் பேசுகையில், “நடைப்பயிற்சி இதயம் மற்றும் சுவாசத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவி செய்யும். தசைகள், எழும்புகள் மற்றும் மூட்டு இணைப்புகள் நலத்துடன் இருக்க உதவுகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸை (osteoporosis) தடுக்கிறது, உடல் எடையை குறைக்க சரியான பயிற்சியாகும்…” என கூறிஉள்ளார்.
இதயத்திற்கு நலம் 
நடைபயிற்சி செய்வது இதய துடிப்பை தற்காலிகமாக அதிகரிக்க செய்கிறது. இது, இதயம் மிகவும் திறனாக செயல்படவும், வலிமையான பம்பிற்கும் பயிற்சியளிக்க உதவிபுரிகிறது. இதய துடிப்பு அதிகரிப்பு காரணமாக அதிகமான இரத்தத்தை இதயம் பம்ப் செய்யும், அதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் அதிகமாகும், உடல் பாகங்கள் மற்றும் தசைகளுக்கு அதிகமான ஆக்ஸிஜனை கொண்டு செல்லும். “நடைப்பயிற்சி நுரையீரல் ஆக்ஸிஜனை உள்வாங்கும் திறனை அதிகரிக்கிறது, உடலில் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, இரத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை மேம்படுத்த உதவும்,” என்கிறார் டாக்டர் சிங்கால்.
வாரத்திற்கு மூன்று முறை 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டாலோ, சைக்கிள் ஓட்டுதல் பயிற்சி மேற்கொண்டாலோ அவர்களுக்கு இதய நோய் காரணமாக உயிரிழப்பு நேரிடுவது 26 சதவிதம் குறைகிறது என ஆய்வு காட்டுவதை சுட்டிக்காட்டுகிறார்.
உடல் எடை குறைக்க
 “5 கிலோ மீட்டர் தொலை அமைதியான முறையில் நடந்தால் கலோரிகளை எரிப்பதற்கு உதவி செய்கிறது. இது உங்களுடைய எடையை குறைக்க உதவுகிறது. உங்களுடைய வயிற்றுப்பகுதியில் இருந்து கொழுப்பை குறைக்க உதவுகிறது, தசைகள் வலுவடையவும் உதவுகிறது,” என்கிறார் டாக்டர் போராஸ்கர். முதல்கட்டமாக நீங்கள் கிலோ கணக்கில் எடையை குறைக்க முடியாது, ஆனால் இஞ்ச், இஞ்சாக நீங்கள் எடையை குறைக்கலாம். ஒரிரு மாதங்கள் தொடர்ந்து நடப்பதன் மூலம் அதனுடைய பயனாக எடை குறைவதை நீங்கள் பார்க்கலாம்.
தொடர்ச்சியாக நடைப்பயிற்சி மேற்கொள்வது உங்களுடைய பசியை அதிகரிக்க செய்யும், நீங்கள் அதிகமாக சாப்பிடலாம் எனவும் எச்சரிக்கிறார். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் நடைப்பயிற்சி உதவிசெய்யும் எனவும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். செரிமானத்தை எளிதாக்கவும் நடைப்பயிற்சி பெரிதும் உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். கை கால்களை வீசி, விரல்களை விரித்து, முழங்கையை மடக்கி நீட்டிப் பயிற்சி செய்துகொண்டே நடக்கலாம்.
ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பது இதயம், உடல் அமைப்பு, இரத்த அழுத்தத்தை மேம்படுத்தும். “ஒருவர் சில நாட்கள் அதிகமாக நடக்கலாம், பிறர் குறைவாக நடக்கலாம். ஆனால் ஒருவாரத்திற்கான நடைப்பயிற்சி நேரம் 150 நிமிடங்கள், அதாவது 2.5 மணி நேரங்கள். நடக்காமல் இருப்பதைவிட ஒவ்வொரு நாளும் சிறிது துரோம் நடப்பதே சிறந்ததுதான்,” என்கிறார் டாக்டர் சிங்கால்.
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் உள்ளது என எளிதாக தவிர்ப்பவர்கள், நடைப்பயிற்சியை மேற்கொள்ள முயற்சி செய்யலாம். நடைப்பயிற்சி செய்யும்போது சுவாசிக்க சிரமம் ஏற்படுதல், தலைச்சுற்றல் ஏற்படுதல், வாந்தி மற்றும் மயக்கம், நெஞ்சு அடைப்பது, நெஞ்சுவலி, தாடையில் வலி, தோள்பட்டை வலி, இதயப் படபடப்பு, வழக்கத்துக்கு மாறாக அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால் நிறுத்திவிட்டு மருத்துவரை சந்தித்து ஆலோசனையை பெறுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *