‘ஆப்ரேஷன் கமல்’ என்றால் என்ன? 2004 அல்லது 2008-ல் நடந்தது 2018-ல் மீண்டும் கர்நாடகாவில் நடக்குமா?

Read Time:6 Minute, 19 Second

2008-ம் ஆண்டு பிஎஸ் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்த மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து 4 எம்.எல்.எ.க்களையும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்களையும் தன்வசப்படுத்தியது. இதற்கு வைக்கப்பட்ட பெயர்தான் ‘ஆப்ரேஷன் லோட்டஸ் அல்லது கமல்’.

கர்நாடக மாநில சட்டசபைக்கு கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது தொங்கு சட்டசபையை நோக்கி சென்றது. பா.ஜனதா 104 இடங்களை பிடித்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) 38 இடங்களில் வெற்றி பெற்றது. யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டு இருந்தபோதே காங்கிரஸ் அவசர, அவசரமாக ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தது.

இருதரப்பும் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என பா.ஜனதா தலைவர்கள் கூறினார்கள். இதனையடுத்து ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பேசுகையில் ‘ஆப்ரேஷன் கமல்’ மீண்டும் பா.ஜனதாவால் தொடங்கப்பட்டு உள்ளது என எச்சரிகையை விடுத்தார். ரூ. 100 கோடி பணம், அமைச்சரவை பதவியென எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதா முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார். காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டது.

இப்போது மீண்டும் ‘ஆப்ரேஷன் கமல்’ பிரபலமாகி உள்ளது. ‘ஆப்ரேஷன் கமல்’ என்ன என்றால் என்பதை தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன்னதாக கர்நாடகாவில் 2004 நடந்ததை பார்ப்போம்.

2004-ல் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி

கர்நாடகாவில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா 79 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இருப்பினும் பிற கட்சிகள் தரப்பில் ஆதரவு அளிக்கப்படவில்லை அக்கட்சி ஆட்சியமைக்கவில்லை. காங்கிரஸ் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் 58 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் தரம் சிங் தலைமையில் ஆட்சியமைத்தது. பின்னர் கூட்டணியின் அடிப்படையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் அரசு நிலைக்கவில்லை.

2006-ம் ஆண்டு தொடக்கத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம், பாரதீய ஜனதா ஆட்சியமைக்க ஆதரவை கொடுத்தது. பா.ஜனதா ஆதரவுடன் குமாரசாமி முதல்வரானார். 20 மாதம் குமாரசாமி முதவர் என்றும், எடியூரப்பா 20 மாதம் முதல்வர் என்றும் கூட்டணி அமைந்தது. ஆனால் இருகட்சிகள் இடையிலான கூட்டணி 2007 அக்டோபரிலே முடிந்தது. எடியூரப்பா முதல்வராக குமாரசாமி அனுமதிக்கவிலை. இதனால் கூட்டணியும் முறிந்தது, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

2008-ல் பா.ஜனதா அரசு, ‘ஆப்ரேஷன் கமல்’

2008-ல் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது பா.ஜனதா 210 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பா.ஜனதா 5 சுயேட்சைகள் உதவியுடன் ஆட்சியை அமைத்தது. சுயேட்சைகள் பலத்துடன் அமைக்கப்படும் அரசு எப்போது வேண்டுமென்றாலும் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் என்று எடியூரப்பா மேற்கொண்ட நகர்வுக்குதான் ‘ஆப்ரேஷன் கமல்’ என பெயர். பா.ஜனதா அரசியல் சூழ்ச்சியால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். இதனால் அவையில் பா.ஜனதா பலம் அதிகரித்தது.

மாநிலத்தில் ஆட்சியமைக்க மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து 4 எம்.எல்.எ.க்களையும், காங்கிரஸ் கட்சியில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதா தன்வசப்படுத்தியது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 4 பேருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர்கள் பதவி இழக்க நேரிட்டது. இதனையடுத்து 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா சார்பில் கட்சிக்குக்கு ஓடிவந்த எம்.எல்.ஏ.க்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பா.ஜனதா 5 தொகுதிகளை தன்வசப்படுத்தியது, இதனையடுத்து அக்கட்சியின் பலம் 220 ஆக உயர்ந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற வில்லை.

இதேபோன்று மீண்டும் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கும் பணியை பா.ஜனதா முன்னெடுக்கலாம் என பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *