நடிகை அஞ்சலி அடுத்ததாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஹாரர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சமீபத்தில் அஞ்சலி நடிப்பில் வெளியான படம் ‘காளி’ படம் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. காளி படத்தில் அஞ்சலியின் நடிப்பு பாராட்டப்பட்டது. பல படங்களில் இவரின் துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
அஞ்சலி நடிப்பில் பேரன்பு படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. நாடோடிகள் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில் பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் ‘மதுரவீரன்’ படத்தை இயக்கிய பி.ஜி.முத்தையா தயாரிப்பில் ஒரு பேய் பட போஸ்டர் வெளியானது. அதில் ஒரு பெண்ணை தெளிவாக காட்டாமல் யார் இந்த என்ற தலைப்பில் ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டும் வகையில் கேள்வியை எழுப்பினர். சமூக வலைதளங்களில் பரவிய போஸ்டரை பார்க்கையில் நடிகை அஞ்சலி தான் அந்த லிசா என்று ரசிகர்கள் கண்டுபித்தனர். அஞ்சலியும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். லிசா என்ற திகில் கலந்த த்ரில்லர் படத்தில் நடிப்பதை உறுதிசெய்து உள்ளார். இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3-டி படமாக உருவாகும் இந்த படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார்.
30 வருடங்களுக்கு முன்பு வெளியான திகில் திரைப்படமான மைடியர் லிசா தற்போது 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
இப்படத்தின் நாயகன் விஜய் வசந்த் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், படத்தின் நாயகியாக அஞ்சலி நடிக்கிறார். அஞ்சலி ஜெய்யுடன் பலூன் என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.