பாலியல் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவனுக்கு சுஷ்மிதா சென் கொடுத்த தண்டனை இதுதான்!

Read Time:3 Minute, 0 Second

1994-ல் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சுஷ்மிதா சென் சுஷ்மிதா சென் பாலிவுட்டில் கால் பதித்து மிகப்பிரபலமான நடிகையானார்.

தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடித்தவர் பிறகு முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். 2006-ம் ஆண்டு வரையில் சினிமாத்துறை ஆதிக்கம் செலுத்தினார், பின்னர் அதனை குறைத்துக்கொண்டார். இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 42 வயதிலும் இளமை தோற்றத்துக்கு சொந்தக்காரர் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். உடல் எடையை பராமரிப்பதில் சுஷ்மிதா சென் எப்போதும் கவனமாக இருப்பார். இதுதொடர்பாக அவர் செய்யும் வொர்க் அவுட்டை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார், அதுவும் சில மணி நேரத்தில் வைரலாகும்.

இப்போது அவர் வெளியிட்டு உள்ள தகவல் மிகவும் அதிர்ச்சிக்கரமாக அமைந்து உள்ளது. முன்னணி நடிகைகள் பலருக்கும் அவரைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக அவரது பாதுகாவலர்கள் இருப்பார்கள்.

அப்படி இருந்தும் பிரபல நடிகை சுஷ்மிதாவிடம் சிறுவன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான் அந்த தகவல். 6 மாதங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது 15 வயது சிறுவன் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக சுஷ்மிதா குறிப்பிட்டு உள்ளார்.

விருது வழங்கும் விழாவிற்கு சென்று இருந்தபோது கூட்டத்தை பயன்படுத்தி ஒருவர் என்னை பின்னால் இருந்து மோசமான முறையில் அணுகினார், அவரை கையும், களவுமாக பிடித்தேன். பின்னால் திரும்பி பார்த்ததும் எனக்கு பெரிதும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் தவறாக நடந்துக்கொண்ட சிறுவனக்கு வெறும் 15 வயதுதான்!. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனை அழைத்து சென்று அட்வைஸ் செய்தேன். பிறகு தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். இது தவறு என்று கூட அவனுக்கு யாரும் சொல்லித் தராமல் இருந்தது தான் எனக்கு வருத்தமாக இருந்தது என கூறிஉள்ளார் சுஷ்மிதா சென். இது பற்றி நான் போலீசில் புகார் அளித்திருந்தால் அவன் வாழ்க்கை பாழாகி இருக்கும், அதனால்தான் அட்வைஸ் கூறி அனுப்பினேன் எனவும் குறிப்பிட்டு உள்ளார் சுஷ்மிதா சென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *