ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் ‘நடிப்பு சுதேசிகள்’ திமுக மீது பாமக தலைவர் ராமதாஸ் பாய்ச்சல்

Read Time:1 Minute, 46 Second

ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக அனுமதி அளிக்குமாம். எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்துவார்களாம் என ராமதாஸ் விமர்சனம் செய்து உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்திய போது கலவரம் வெடித்தது. போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறினார். திமுக ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, போராட்டமும் அறிவித்து உள்ளது. இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், ஸ்டெர்லைட் ஆலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு 600 சரக்குந்து ஓடுகின்றனவாம்கோடிகள் கொட்டுகின்றனவாம். ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக அனுமதி அளிக்குமாம். ஆனாலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுவார்களாம். என்னவொரு நடிப்பு! என பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *