ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்? யார் பொறுப்பு? மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி

Read Time:4 Minute, 10 Second
Page Visited: 71
ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்? யார் பொறுப்பு? மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களை கலைப்பதில் துப்பாக்கி சூடு விவகாரத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரிசையான கேள்விகளை மாநில அரசுக்கு எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் எழுப்பி உள்ள கேள்விகள் பின்வருமாறு:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்?

போராட்டத்தின் போது கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்?

எந்த சட்டத்தின் கீழ் போராட்டக்காரர்கள் மீது இதுபோன்ற ஆயுதங்களை பிரயோகிக்க அனுமதி அளிக்கப்பட்டது?

அபாயகரமான காயங்களை தவிர்க்கும் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் புல்லட்கள் பயன்படுத்ததாதது ஏன்?

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன்?

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்ததாது ஏன்?

மாநில உளவுத்துறையின் ஒட்டுமொத்த தோல்விதான் துரதிஷ்டவசமான உயிரிழப்பிற்கு காரணம் என கூறுவது மிகவும் சரியானதா?

மாநில உளவுத்துறை ஐஜி தரப்பில் போலீஸ் மற்றும் முதல்-அமைச்சகத்திற்கு நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா?

11 தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதில் பொறுப்பு யார்? சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்த டிஜிபி மீது தமிழக அரசு நடவடிக்கையை எடுக்குமா? இவ்விவகாரத்தில் ஒட்டுமொத்த சம்பவத்தில் தன்னுடைய பொறுப்பு குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிப்பாரா? ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நீதி கிடைக்குமா? என கேள்விகளை எழுப்பி உள்ளார்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறை உள்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வியாகும். காவல்துறையின் வரம்பு மீறிய, சட்டத்துக்கு புறம்பான மற்றும் மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோயில் தெரிவித்து உள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *