செவிலி லினியின் கடைசி நேரங்கள்… உருக்கமான கடிதம்!

Read Time:7 Minute, 9 Second

திருவனந்தபுரம்

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்படாத வரையில் கடுமையான காய்ச்சல், தலைவலி, மயக்கம் என வந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் திடீர் பாதிப்பு மற்றும் மர்மான மரணங்களை அடுத்து புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் அனுப்பட்டது. பரிசோதனையில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் முதன் முதலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்தவர் செவிலி லினி (வயது 28). அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் (மூவரும் உயிரிழந்துவிட்டார்கள்). மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு லினி மிகவும் கனிவான முறையில் சிகிச்சையளித்தார். வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவும், பகலுமாக கண்விழித்து சிகிச்சையை மேற்கொண்டார்.

17-ம் தேதி மாலையில் தன்னுடைய குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட பின்னர் மாலை 6 மணிக்கு பணிக்கு சென்றார். இரவு முழுவதும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும், உதவிகளையும் செய்துவிட்டு வீடு திரும்பிஉள்ளார். மறுநாள் காலையில் உடல் நலம் பாதிப்பு இருப்பதை உணர்ந்த லினி மாவட்ட மருத்துவமனைக்கு புறப்பட்டு உள்ளார். செல்லும் வழியிலே வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ காலில் பேசிஉள்ளார். கணவரிடம் தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அதனுடைய வீரியத்தையும் அவர் குறிப்பிடவில்லை. சாதாரண காய்ச்சல் மருத்துவமனைக்கு செல்கிறேன் என கூறிஉள்ளார்.

மருத்துவமனைக்கு சென்றதும் மருத்துவர்களிடம் நிலையை எடுத்து உரைத்து உள்ளார். தனக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ள லினி, தனி வார்டில் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளார். அவருடைய தாயாரும், சகோதரியும் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உள்ளனர். ஆனால் அவர்கள் யாரையும் லினி தனக்கு அருகே நிற்க அனுமதிக்கவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட லினியை அவருடைய கணவர் கடைசிநேரத்தில் பார்த்தார், அப்போது சில வார்த்தைகளை பேசிஉள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லினி திங்கள் கிழமை காலையில் உயிரிழந்தார்.

அவருடைய சடலத்தை உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. அவருக்கு இறுதிச்சடங்கு யாரும் செய்யவில்லை. வைரஸ் பரவல் காரணமாக மாநில அரசின் சுகாதாரத்துறையே பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை மின்மயானத்தில் வைத்து எரித்துவிடுகிறது.

செவிலி லினியின் உயிரிழப்பு கேளரமிட்டுமில்லாது இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பிஞ்சுக் குழந்தைகளை விட்டுப் பிரிந்த செவிலி லினியின் கடைசிநேர உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செவிலி லினியின் கணவர் ப்க்ரைனில் வேலை பார்ப்பவர். கடைசி நேரத்தில் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்த கடிதத்தை லினி எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், சாஜி சேட்டா, எனது முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் உங்களைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கைகூட எனக்கு கிடையாது. என்னை மன்னிக்கவும். நமது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்து கொள்ளுங்கள்.  விவரமறியா அந்த குழந்தைகளை உங்களுடன் வளைகுடா நாட்டுக்கே கூட்டி சென்றுவிடவும். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்கக்கூடாது என லினி தன்னுடைய கடிதத்தை எழுதி உள்ளார்.

லினியின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் (ஹரிதுல் (வயது 2), சித்தார்த் (வயது 5)

லினியின் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் (ஹரிதுல் (வயது 2), சித்தார்த் (வயது 5)) தன்னுடைய தாயுக்கு என்ன நேரிட்டது என தெரியாமலே விளையாடுவது அனைவரது நெஞ்சையும் உடைய செய்கிறது. தாய் வந்துவிடுவார் என்றே அந்த குழந்தைகளின் வாழ்க்கை செல்கிறது. தாயை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கும் மாநில அரசு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. அவருடைய கணவர் சஜீசுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

லினி பிரிவு தொடர்பாக சஜீஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசுகையில், செவிலியர் பணி மிகவும் கடினமானது. எனது மனைவியை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். லினி என்னுடன் புதன் கிழமை தொலைபேசியில் பேசினார். அப்போது காய்ச்சல் அடிப்பதுபோல் இருக்கிறது என்றார். ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு நான் கூறினேன். ஆனால், மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் இருக்கிறார்கள், நான் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை நான் மருத்துவமனைக்கு சென்றேன். 2 நிமிடங்கள் மட்டுமே என்னால் அவரைப் பார்க்க முடிந்தது. அவருக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்தது. எங்களால் அதிகம் பேசிக்கொள்ள முடியவில்லை. நான் அவர் மீது எனது கையை வைத்தேன்.

அப்போது அவருக்கு சுயநினைவு இருந்தது. லினியை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன், என கூறிஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *