கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு சிம்ரன் ஜோடியாகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலம் மையம் கொண்ட சிம்ரன் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் ரி-என்டிரி ஆனார். தொடர்ந்து நடித்து வருகிறார். கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த சிம்ரன், ரஜினியுடன் மட்டும் நடித்தது கிடையாது.
சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர் சிம்ரன்தான். ஆனால் சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோனது.
காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு சிம்ரன் ஜோடியாகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன், விஜய்சேதுபதி நடிப்பது மட்டும்தான் உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையே கதாநாயகியாக நடிக்க திரிஷா, நயன்தாரா, தீபிகா மற்றும் அஞ்சலி என முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் அடிபட்டது. சிம்ரன் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டால் அவர் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். திரிஷாவும் தொடர்ந்து ரஜினியின் படத்தில் நடிக்க வெளிப்படையாக விருப்பம் தெரிவித்து வருகிறார்.
நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வேடத்திற்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என கருதப்படுவதால் படக்குழு அவரை நாடியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஆனால் சிம்ரன் நடிப்பதை படக்குழு உறுதிசெய்ய வில்லை.
Average Rating