ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

Read Time:3 Minute, 2 Second

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் மற்றும் மின்சார சேவையானது நிறுத்தப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை செயல்பட உத்தரவை புதுப்பிக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் செய்ததை தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்று விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. அனுமதி பெறாமல் தயாரிப்பு பணிகளை மீண்டும் தொடங்க கூடாது என ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. ஆனால் ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உத்தரவு மீறபப்ட்டு, தயாரிப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடவும், மின்சார இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

இயங்குவதற்கு வாய்ப்பு இல்லை!

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கான பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி, எஸ்.பி. முரளி ரம்பா மற்றும் வியாபாரிகள் கலந்துக்கொண்டார்கள். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது, அதற்கான நடவடிக்கையையும் தொடங்கப்பட்டது.

பின்னர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில் துத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று குறுப்பிட்டார்கள்.

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். போராட்டத்தில் 19 பேர் படுகாயம், 83 பேர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆலை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்குவதற்கு அரசுக்கு விருப்பம் இல்லை. ஆலையை நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை.

மக்கள் இதனை புரிந்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *