சுற்றுச்சூழல் விதிமுறைகளை மாற்றியமைத்து “ஸ்டெர்லைட்டிற்கு” உதவிய மோடி அரசு!

Read Time:13 Minute, 30 Second

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி(மோடி அரசு) பசுமை ஒழுங்குமுறைகளில் கொண்டுவந்த விளக்கமானது,  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு உதவுகிறது, திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களை ஆலோசிக்காமலே ஆலைகளை கட்ட அனுமதிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 22-ம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை விரிவாகத்திற்கு எதிராக பாத்திமா தொடர்ந்த வழக்கில் விசாரணயை மேற்கொண்ட ஐகோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது. ஆலையை கட்டுவதற்கு முன்னதாக நிறுவனம் பொதுமக்களின் கருத்தை கேட்கவேண்டும் என்று ஸ்திரமாக கூறிவரும் நிலையில், கோர்ட்டில் ஸ்டெர்லைட் நிர்வாகம், சட்டப்பூர்வமாக இது தேவையில்லை என்று கூறிவருகிறது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்களின் கருத்துக்கள் இல்லாமல் மத்திய அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற்றுவிட்டதாக கூறிவருகிறது. இவ்விவகாரத்தில் சுற்றுசூழல்துறை மற்றும் பல்வேறு கோர்ட்டுகளின் அறிக்கையை பார்க்கையில்

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பசுமை ஒழுங்குமுறைகளில் கொண்டுவந்த விளக்கமானது, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு உதவுகிறது, அதாவது திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களை ஆலோசிக்காமலே ஆலைகளை கட்ட அனுமதிக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து விதிவிலக்கு கோரி பல்வேறு தொழில்சாலைகள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது என்பது கோர்ட்டு மற்றும் அரசுக்களின் ஆவணங்களை ஆய்வு செய்கையில் தெரிகிறது என Business Standard கூறிஉள்ளது. விதிமுறைகளில் இருந்து விலக்கு என்பது அப்போதைய சுற்றுசூழல் துறை அமைச்சகத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டது, அவையனைத்தும் ‘விளக்கம்’ என்பதின் பெயரில் புறந்தள்ளப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ஆலை அமைப்பு உள்பட வேதாந்தா மற்றும் பிற நிறுவனங்கள் அவர்களுடைய ஆலையை அமைப்பதற்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு முன்னதாகதான் ‘விளக்கம்’ அளிக்கப்பட்டு உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் விளக்கமானது நிறுவனங்களுக்கு தற்செயலானதாக இருந்து இருக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சுற்றுசூழல் துறை அமைச்சகம் மே 2014-ல் தூத்துக்குடியில் வேதாந்தா திட்டம் போன்ற திட்டங்களுக்கு சட்டத்தின்படி, முதலில் பொதுமக்களின் ஆலோசனையை பெற வேண்டும். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பசுமை ஒழுங்குமுறைகளில் கொண்டுவந்த விளக்கமானது (வேதாந்தாவிற்கு ஆதரவானது) சட்டவிரோதமானது என்று 2016 தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது. தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுசூழல் துறை அமைச்சக அதிகாரிகளை கடிந்துக்கொண்டது. அரசின் டிசம்பர் 2014 உத்தரவுகளை ரத்து செய்தால் பல்வேறு திட்டங்களை மோசமாக பாதிக்கும் என்று அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். இறுதியில் மத்திய அரசின் டிசம்பர் 2014 உத்தரவுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்தது.

மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பெயரில், மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் புதிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. தொழில்சாலை மையங்களில் சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும் என்று. அதற்குள் தூத்துக்குடியில் தன்னுடைய ஆலை விரிவாக்க பணியை மேற்கொள்வதில் வேதாந்தா தன்னை பாதுகாத்துக்கொண்டது, பொதுமக்களின் ஆலோசனையை பெற வேண்டியதில்லை என்பதில். இப்போது வரையில் வேதாந்தா, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்றுவிட்டோம் என்று கூறுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மற்றும் பிற உண்மைகளை மையமாக கொண்டு, ஐகோர்ட்டு வேதாந்தா நிறுவனம் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொள்ள தடை விதித்தது, பொதுமக்களின் ஆலோசனையை பெற உத்தரவிட்டது.
வழக்கமான பசுமை விதிமுறைகள்

பெரிய அளவிலான அனைத்து தொழில்துறை திட்டங்களுக்கும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் இருந்து கட்டாயமாக அனுமதியை பெற வேண்டும். முதல்கட்டமாக திட்ட மேம்பாட்டாளர்கள் ஆலை அமைக்கப்படும் இடத்தில் உள்ள மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான அறிக்கையை அளிக்கவேண்டும். பின்னர் இந்த அறிக்கையானது அப்பகுதி மக்களிடம் வழங்கப்பட வேண்டும், மாநில அரசின் கண்காணிப்பின்கீழ் அறிக்கையானது மக்களிடம் ஆலோசனைக்கு வழங்கப்படவேண்டும். இதனையடுத்து இத்திட்டத்தின் பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வு செய்யும்.

திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும். திட்டம் தொடர்பாக மக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும்போது திட்டத்தை தடுக்க முடியாது, ஆனால் திட்டத்தை எடுக்க முன்னெடுப்பதற்கு முன்னதாக நிறுவனம் மற்றும் மத்திய அரசு அவர்களுடைய கவலைகளுக்கு தீர்வு காணவேண்டும்.

2006-ம் ஆண்டுக்கு முந்தைய சுற்றுச்சூழல் அனுமதி விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் பொதுமக்களின் ஆலோசனையை பெறுவதில் விலக்கு உருவாக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற தொழில்துறை பூங்காவிற்கு சிறிய தொழிற்சாலைகளுக்கு இந்த விலக்கு வழங்கப்படுகிறது. இந்த விலக்கு அளிக்கப்பட்டது தொடர்பாக 2014-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கேள்வி எழுந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே சுற்றுச்சுழல் அனுமதியின்றி தொடங்கப்பட்ட தொழிற்துறை பூங்காக்கள் 2006 சுற்றுச்சூழல் விதிகளுக்கு முன்வருமா? இதுபோன்ற சூழல்களில் மக்களுடைய ஆலோசனையை பெற வேண்டிய அவசியம் இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.

காங்கிரஸ் அரசு இவ்விவகாரத்தில் 2014 மே 16-ம் தேதி தெளிவு நிலையை கொண்டுவந்தது. சுற்றுச்சுழல் அனுமதியை பெற்று அமைக்கப்பட்ட தொழிற்துறை பூங்காக்களில் அமைக்கப்படும் தொழில்சாலைகளுக்கு பொதுமக்களிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியம் கிடையாது. தொழில்துறை பூங்காக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்படவில்லை என்றால், அதற்குள் கட்டப்படும் தொழில்சாலைகள் பொதுமக்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்பது அவசியமானது என்றது. தொழில்துறை பூங்காங்கள் பொதுமக்களுக்கும், சுற்றுச்சுழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டால், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் பொதுமக்களின் ஆலோசனை உள்பட ஒட்டுமொத்த விரிவான அனுமதி விதிமுறையானது அவசியம் கிடையாது.
ஆனால் மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ‘தொழில் தொடங்குவதை எளிதாக்குவோம்’ என்ற மந்திரத்துடன் வந்தது. இவ்விவகாரத்தில் தொழில் அதிபர்கள் வேண்டுகோளுக்கு இணங்க டிசம்பர் 10, 2014 அன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்போதைய சுற்றுச் சூழல் மந்திரி ஒப்புதல் அளித்த அலுவலகக் குறிப்பொன்றை விளக்கம் என வெளியிட்டது.  தொழில்துறை மண்டலங்கள் சுற்றுச்சுழல் அனுமதியை பெறவில்லை என்றாலும், அங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மக்களின் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ‘தொழில் தொடங்குவதை எளிதாக்குவோம்’ என்ற மந்திரத்துடன் களமிறங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இந்த முக்கிய திருத்தமானது, வேதாந்தா போன்ற போன்ற நிறுவனங்களுக்கு பெரும் செல்வச்செழிப்பான அறிவிப்பானது.

வேதாந்தா பயனடைந்தது எப்படி?

சிப்காட் தொழில் பூங்காவில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கட்டப்பட்டு உள்ளது. 2006 சுற்றுச்சுழல் விதிமுறைகள் வருவதற்கு முன்னதாகவே வந்துவிட்டது.

வேதாந்தா நிறுவனம் 2009-ம் ஆண்டு ஆலை விரிவாக்கத்திற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் சுற்றுசூழல் துறை அமைச்சகம் பொதுமக்களின் ஆலோசனையின்றி அனுமதியை வழங்கியது. அனுமதியானது 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதற்கு பின்னர் 2013-ம் ஆண்டு அனுமதியை நீட்டிக்க விண்ணப்பம் செய்தது. மே 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேதாந்தா விரிவாக்கம் போன்ற விஷயங்களில் பொதுமக்களின் கருத்தை கேட்பது அவசியமானது என்று உத்தரவிட்டது. ஆனால் பா.ஜனதா அரசு டிசம்பர் 2014-ல் பழைய நிலைப்பாட்டை மாற்றியது.

வேதாந்தாவிற்கு டிசம்பர் 2018 வரையில் அனுமதியை நீட்டித்தது சுற்றுச்சூழல் அமைச்சகம். இதுபோன்ற திட்டங்களில் பொதுமக்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்பது தொடர்பான விவகாரத்தில் தொழில்சாலைகள் நீதிமன்றங்களில் போராடிய நிலையில் இந்நகர்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனுமதி பெற்றதும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவுப்படுத்த பணிகளை தொடங்கியது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மார்ச் மாதம் போராட்டத்தை தொடங்கினர். 100-வது நாள் போராட்டத்தின் போதுதான் துப்பாக்கி சூடு சம்பவம் நேரிட்டது.

நன்றி : Business Standard

தி இந்து பத்திரிக்கைக்கு ஸ்டெர்லைட் நிறுவன சிஇஓ பி.ராம்நாத் அளித்து உள்ள பேட்டியில்,

“ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சிப்காட் நிலம் ஒதுக்கியது. இரண்டாவது யூனிட்டுக்கான நிலம் 2005-ம் ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் ஆலை பயன்பாட்டுக்காக 2006க்கு முன் பெறப்பட்ட நிலங்கள் தொடர்பாக மக்கள் கருத்து கேட்க தேவையில்லை. அதனாலேயே நாங்கள் மக்கள் கருத்து கேட்காமல் நேரடியாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பித்து தடையில்லா சான்றிதழ் வாங்கினோம். ஆனால், இப்போது எல்லாவற்றையும் மாற்றி பேசுகிறார்கள், நாங்கள் கோர்ட்டை நாட உள்ளோம்,” என குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *