மக்களுக்கு அடுத்த ‘ஷாக்’! சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரையில் உயர்வு

Read Time:4 Minute, 3 Second
Page Visited: 83
மக்களுக்கு அடுத்த ‘ஷாக்’! சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரையில் உயர்வு

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து பொதுமக்களுக்கு மற்றொரு ‘ஷாக்’காக சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தை பொறுத்து தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றும் முறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.

கடந்த மே மாதம் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 19 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் கொண்டு வரும் முறை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்ததும் 14-ந் தேதி முதல் மீண்டும் அந்த முறை நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு கடந்த 16 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே இருந்தது. பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.80 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.3.38 காசுகளும் உயர்ந்தன.

சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகக்குறைந்த அளவு ஒரு காசு முதல் 6 வரை குறைந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை அரசு சந்தித்தும் வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் கணக்கில் உயர்கிறது, குறையும் போது பைசா கணக்கில் குறைகிறது எனவும் விமர்சனம் செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்று 100-ரூபாயை நெருங்குவதால் நடுத்தர மக்களும், சாமானிய மக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் ஆண்டுக்கு 12 வழங்கப்படுகிறது. இதற்கு மேல் தேவை உள்ளவர்கள் சந்தையில் உள்ள விலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.

மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 2.34 ரூபாயும், மானியமில்லாமல் சந்தையில் வாங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை 48 ரூபாயும் உயர்த்தி உள்ளது. விலை உயர்வை அடுத்து டெல்லியில் மானியத்துடனான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.493.55-க்கும், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.698.50-க்கும் வழங்கப்படும். இந்த விலை உயர்வு ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மானியத்துடனான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.481.84-க்கும், மும்பையில் ரூ.491.31-க்கும், கொல்கத்தாவில் ரூ.496.65-க்கும்  விற்பனை செய்யப்படும். மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.712.50-க்கும், மும்பையில் ரூ.671.50-க்கும்,  கொல்கத்தாவில் ரூ.723.50-க்கும் விற்பனை செய்யப்படும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *