உலக சுற்றுச்சூழல் தினம்: பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!

Read Time:10 Minute, 17 Second

சுத்தமான இயற்கையை நம்முடைய சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் அனைவரும் செயல்படுவோம் என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

உலகம் முழுவதும் ஜூம் 5-ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டங்களின் அம்பாசிடராக இந்தியாவை ஐ.நா சபை அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு ‘பிளாஸ்டிக் மாசை முறியடிப்போம்’  என்பது  உலக சுற்றுச்சுழல் தினத்தின் கருப்பொருளாக உள்ளது. உலகில் சுற்றுசுழல் மாசுப்பாட்டிற்கு மிகவும் சவாலாக விளங்கும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுப்பாட்டை முறியடிக்கும் வகையில் அனைத்து நாட்டவர்களும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலம், காற்று, நீரை மாசுப்படுத்துவதில் மற்ற குப்பைகளை பிளாஸ்டிக் குப்பைகள் தோற்கடித்துவிட்டது. அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் நாம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் விதமாகவே உள்ளது, பின்னர் அதனை வீசியடிக்கிறோம். நம்முடையை வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்று குப்பைகளை மற்றொரு பகுதிக்கு அனுப்புகிறோம். மற்றொரு பகுதிக்கு அனுப்புவதால் நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியுமா?.

பிளாஸ்டிக் மிகவும் ஆபத்தானது

பிளாஸ்டிக் குப்பைகள் பெரும்பாலும் மக்காதவை. பிளாஸ்டிக் பொருட்கள் சிறுசிறு துகள்களாக உடையுமே தவிர, அவை மக்குமா? என்பது கிடையாது. அவ்வாறு சிறு சிறு துகள்களாகும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலம், காற்று மற்றும் கடல்பகுதியை மிகவும் மோசமாக பாதிக்கிறது. நாம் வீசும் ஒவ்வொரு பிளாஸ்டிக் குப்பையும் விஷம்தான். மனிதன் பிளாஸ்டிக் கழிவுகளால் அவனுக்கு மட்டும் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை, சுற்றுசூழலை மையமான அனைத்து உயிரினங்களுக்கும் அழிவையே ஏற்படுத்துகிறான். பின்வரும் சந்ததிகளையும் பாதிக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களை நிலத்தில் போடுவதாலும், கடலில் போடுவதாலும் சுற்றுசூழலை பாதுகாக்க முடியாது. இப்போது உப்பு மற்றும் குடிநீரிலும் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகிறது. உணப்பொருட்களில் பிளாஸ்டிக் துகள்கள் என்று ஆய்வில் தெரியவரும் போது அதிர்ச்சியடையும் நாம் அதனை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கையை மேற்கொண்டோமா? என்றால் கிடையாது. கடைக்கு செல்லும் போது எல்லாம் பிளாஸ்டிக் கவர் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

உலகை சிதைக்கும் பிளாஸ்டிக் அளவு 

 • உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.
 • ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்கு செல்கிறது, ஒவ்வொரு நிமிடமும் நிரப்பப்படும் ஒரு குப்பை லாரியின் ஒட்டுமொத்த குப்பைகளுக்கு இணையான அளவாகும்.
 • கடந்த ஒரு நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைவிட அதிக அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் கடந்த 10 வருடங்களில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது.
 • உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில், சுமார் 50 சதவித பொருட்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களாக இருக்கின்றன.
 • ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்கள் நுகர்வோரால் வாங்கப்படுகின்றன.
 • உலகமெங்கும் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த கழிவுகளில், 10 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகளாக இருக்கின்றன என ஐ.நா. புள்ளி விபரங்கள் காட்டுகிறது.

சென்னையில் 429 டன்கள் பிளாஸ்டிக் கழிவு

மத்திய சுகாதார கட்டுப்பாட்டு வாரியம் சேகரித்த தகவலின்படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நாடு முழுவதும் 5.6 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கிறது, இவற்றில் 2.24 மில்லியன் சேகரிக்கப் படமாலமே காணப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் மாநிலமாக டெல்லி (689 பிளாஸ்டிக் கழிவுகள்) உள்ளது. இரண்டாவது நகராக சென்னையில் 429 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கிறது. தமிழகத்தில் 301 பதிவுசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி/மறுசுழற்சி நிறுவனங்கள் உள்ளது, அவற்றை உரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் 5 நிறுவனங்கள் உள்ளது.

எச்சரிக்கையாக 2015-16-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் சேர்ந்த பிளாஸ்டிக் கழிவுகளின் மதிப்பீடு 1,50,323 டன்களாக உள்ளது. இதே காலகட்டங்களில் 26.8 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது என தகவல்கள் காட்டுகிறது. சுத்தமான இயற்கையை நம்முடைய சந்ததியினருக்கு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் அனைவரும் செயல்படுவோம் என்பதை உறுதிசெய்வோம்.
நம்முடைய சுகாதாரம், பூமி மற்றும் எதிர்க்கால சந்ததிக்காக நம்மால் மீண்டும் பயன்படுத்த முடியாது என்றால் அப்பொருளை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். அரசுக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தாலும், சமூதாயத்தின் உதவியின்றி அது வெற்றியடையாது. இதுவரையில் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் தடை அறிவிப்புகளும் வெற்றியடையவில்லை. இருப்பினும், பிளாஸ்டிக் ஒழிப்பில் அடிப்படையாக நாம் அவ்வகைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 பிளாஸ்டிக் ஒழிப்பில் உங்களுடைய பங்களிப்பு 

 •  நீங்கள் அடுத்த முறை ஷாப்பிங் போகும் போது, உங்களுடைய பையை கொண்டு செல்லுங்கள்.
 •  உணவகங்களில் சாப்பிட செல்லும் போது பிளாஸ்டிக் இல்லாத பொருட்களில் வழங்க வலியுறுத்துங்கள்.
 •  பேக்கிங் செய்யப்பட்ட குடிநீரை வாங்குவதை தவிர்த்துவிடுங்கள் (உங்களுடைய பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள்)
 •  உணவகங்களில் உணவுப்பொருட்களை வாங்கும் போது பிளாஸ்டிக் உபகரணங்களை வாங்க மறுத்துவிடுங்கள்.
 •   டீ, காப்பி மற்றும் பழச்சாறு குடிக்க பிளாஸ்டிக் கப்களை தவிர்த்துவிடுங்கள்.
 •  கடைக்கு செல்லும் போது கையில் பையை கொண்டு செல்லுங்கள். உணவகம், இறைச்சி வாங்கும் போது அதற்கான பாத்திரத்தை கொண்டு செல்லுங்கள்.

பிறநாடுகள் பிரச்சனையை எதிர்க்கொள்வது எப்படி?

ருவாண்டா: ஆப்பிரிக்காவில் வளரும் நாடான ருவாண்டா 2008 முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில் இருந்து விடைபெற்றது. பிறநாடுகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு வரியை மட்டும் விதிக்கும் பட்சத்தில் ருவாண்டா மட்டும் முழு பிளாஸ்டிக் பை தடையை அமல்படுத்தி வெற்றியடைந்து உள்ளது.

பிரான்ஸ்: பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் மாசுபாடு உலக அளவில் அதிகரித்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் 2016-ம் ஆண்டு பிளாஸ்ட் தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. பிளாஸ்ட் பொருட்களுக்கு 2020-ம் ஆண்டில் முற்றிலும் அங்கு தடை விதிக்கப்படும். 2025-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு 2025-ம் ஆண்டுக்குள் தவிர்க்கப்படும்.

சீனா: கடந்த 2008-ம் ஆண்டு சீனாவும் பிளாஸ்டிக் விவகாரத்தில் புதிய சட்டத்தை கொண்டுவந்தது. கடைகள் (சிறியது அல்லது பெரியது) அனைத்தும் இலவசமாக பிளாஸ்டிக் பைகளை வழங்குவது சட்டவிரோதமானது என்று விதி கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இரண்டு ஆண்டுகளில் 50 சதவிதம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்தது.

சுவீடன்: உலகில் சிறந்த மறுசுழற்சி நாடாக கருதப்படும் சுவீடன், பிளாஸ்டிக்கிற்கு தடையில்லாமல், அதிகமான மறுசுழற்சி கொள்கையை கொண்டுவந்தது.

அயர்லாந்து: 2002-ம் ஆண்டு அயர்லாந்து பிளாஸ்டிக் பைகளுக்கு வரிவிதிப்பை கொண்டுவந்தது. அதனுடைய பொருள் பொருட்களை வாங்குபவர்கள் பெருமளவு தொகையை கொடுத்து பைகளை வாங்க வேண்டும். இதனையடுத்து ஒரு வாரங்களுக்குள் அங்கு பிளாஸ்டிக் பை பயன்பாடு 94 சதவிதம் குறைந்தது.

One thought on “உலக சுற்றுச்சூழல் தினம்: பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *