பேஸ்புக் பிரைவசி ‘பக்’ காரணமாக 14 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு, தனிப்பட்ட தகவல்கள் அனைவருக்கும் பகிர்வு!

Read Time:5 Minute, 24 Second
Page Visited: 72
பேஸ்புக் பிரைவசி ‘பக்’ காரணமாக 14 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு, தனிப்பட்ட தகவல்கள் அனைவருக்கும் பகிர்வு!

பேஸ்புக் பிரைவசி ‘பக்’ காரணமாக 14 மில்லியன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைவருக்கும் பகிரப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். சமீப காலமாக முகநூல் தொடர்பாக உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை எதிர்க்கொண்டு வருகிறது. பேஸ்புக் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியது.

‘பேஸ்புக்’ பயனாளர்கள் 5 கோடிப்பேரின் தனிப்பட்ட தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தல்களின்போது திருடப்பட்டது.

பேஸ்புக் இணையதளத்தில் தகவல் திருட்டு விவகாரம் சர்ச்சையாகி நிலையில் இந்திய அரசும் எச்சரிக்கை விடுத்தது. விளக்கம் அளிக்க பேஸ்புக்கிற்கு நோட்டீஸ் விடுத்தது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் தகவல்களை ரகசிய ஒப்பந்தத்தின் பேரில் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்பட 60 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது.  ஹவாய், லனாவோ குரூப், ஓப்போ மற்றும் TCL Corp போன்ற சீன நிறுவனங்களுக்கும் தகவல் பகிரப்பட்டு உள்ளது என்பதை பேஸ்புக் ஒப்புக்கொண்டது. இதுதொடர்பாக வரும் 20-ம் தேதிக்குள் விளக்கம் தருமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் பேஸ்புக் பிரைவசி ‘பக்’ காரணமாக 14 மில்லியன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பயனாளர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அவர்களுக்கு தெரியாமலே அனைவருக்கும் பகிரப்பட்டு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது.
பேஸ்புக் பயனாளர்கள் தாங்கள் பதிவிடும் தகவல்களை யாரெல்லாம் பார்க்க வேண்டும், யாருக்கு தெரியக்கூடாது என்பதை முன்கூட்டியே தேர்வு செய்யும் வசதி உள்ளது. பயனாளர்கள் வெளியிடும் தகவல்களை, அனைவருக்கும் தெரியலாம் (Public), நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மட்டும் என்று அதற்கான பட்டனை கிளிக் செய்துக்கொள்ளலாம். இவ்வாறு பயனாளர்கள் குறிப்பிட்ட நபர்களுக்குதான் என பதிவிடும் தகவல்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் (Public) சென்று உள்ளது என்பது தெரியவந்து உள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப மாற்றம் கொண்டுவந்த போது ‘பக்’ கோளாறு ஏற்பட்டு இத்தவறு நடந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சனை கடந்த மாதம் 18 முதல் 22 வரையில் இருந்து உள்ளது. சரிசெய்யப்பட்ட பின்னர் 23-ம் தேதியில் இருந்து பயனாளர்கள் தேர்வு செய்யும் பிரிவுக்கு மட்டுமே தகவல்கள் தெரிந்தது. ஆனால் 18 முதல் 22-ம் தேதி வரையில் நேரிட்ட பிரச்சனையை சரிசெய்ய 27-ம் தேதி வரையில் நேரம் எடுத்தது. தொழில்நுட்ப கோளாறு நேரிட்ட இப்பிரச்சனை 18-ம் தேதிக்கு முன்னர் பதிவிட்ட தகவல்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இப்போது பயனளார்கள் அவர்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து பயனடையலாம்.

தவறு நேரிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தொழில்நுட்ப ‘பக்’ காரணமாக நேரிட்ட பிரச்சனையில் 14 மில்லியன் பயனளார்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என பேஸ்புக் கணிக்கிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பயனாளர்கள் ஏற்கனவே தகவலை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட பிரிவிற்கு அதன்படி தகவல்களை நிலைப்பெற செய்து சரிசெய்தும் உள்ளது. ஏற்கனவே தகவல் பாதுகாப்பில் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் பேஸ்புக், இச்சம்பவத்தினால் தர்மசங்கடத்தை எதிர்க்கொண்டு உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *