சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும்! நிதி ஆயோக் எச்சரிக்கை

Read Time:5 Minute, 59 Second

வரலாற்றில் இல்லாத வகையில் இந்தியா தண்ணீர் பிரச்சினையை எதிர்க்கொள்கிறது, இந்நிலையானது வரும் காலங்களில் மிகவும் மோசமடையும் என நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்தியா முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக நிதி ஆயோக் விரிவான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 60 கோடி இந்தியர்கள் இப்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்க்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் பாதுகாப்பான நீர் கிடைக்கப் பெறாததால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் தண்ணீர் பஞ்சத்தின் நிலை மேலும் மோசமடையும். 2030 ஆண்டின் நாட்டின் நீர் தேவையானது இருமடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட ‘Composite Water Management Index’ அறிக்கையில், 2020-ம் ஆண்டில் 21 பெரும் நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதி ஆயோக் அறிக்கையில், இந்தியாவில் 70 சதவித நீர் மாசடைந்துள்ளது, நீர் தர குறியீட்டில் 122 நாடுகள் அடங்கிய பட்டியலில் 120-வது இடம் பிடிக்கிறது. இந்தியா முழுவதும் 60 கோடி மக்கள் தினந்தோறும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பான நீர் கிடைக்கப் பெறாததால் ஆண்டு தோறும் 2 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் 40 சதவித மக்களால் குடிநீரை பெற முடியாது. இந்தியாவில் புதுடெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்கள் மோசமான தண்ணீர் பிரச்சனையை எதிர்க்கொண்டு வருகிறது.
2020-ம் ஆண்டில் இந்நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிடும். இங்கு வாழும் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாககூடும். மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதமும் 6% சதவீதம் அளவிற்கு சரியும். 40 சதவீத தண்ணீர் பயன்படுத்த தகுதி இல்லாத நிலையில் உள்ளது. இந்தியாவில் 50 சதவிதத்திற்கும் மேலான பகுதிகளில் விவசாயம் மழைநீரை நம்பியே உள்ளது. தண்ணீர் பிரச்சினையால் நாட்டின் வேளாண்மை பாதிப்பை சந்திக்கும், உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இதனால் நாட்டில் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்குவதேகூட கேள்விக்குரியாகும் சூழல் உள்ளது.

பல மாநிலங்களில் சொல்லும்படியான அளவு மழை பெய்துள்ள போதிலும் தண்ணீர் மேலாண்மை சரியாக இல்லாததே இவ்வாண்டு வறட்சிக்கு காரணம். குறிப்பாக குளம், குட்டை, வாய்க்கால், பாசன ஏரிகள் என எந்த நீர்நிலையும் தூர் வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை, நீர் ஆதாரங்களை அழித்து வருகின்றனர். மேலும், நீர் ஆதாரங்களை மாசுபடுத்தி இருக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக்கி விடுகின்றனர். பொதுவான தண்ணீரை சரியான முறையில் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு உள்ளது, இருப்பினும் இது சரியான முறையில் இது செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 24 மாநிலங்களில் தண்ணீரை எந்த அளவிற்கு சரியாக பயன்படுத்துகின்றன எனவும் நிதி ஆயோக் ஆய்வு செய்துள்ளது.
தண்ணீர் மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியாவில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடிக்கிறது. இதனையடுத்து ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரையில் திரிபுரா மாநிலம் முதலிடம் பிடிக்கிறது. இதனையடுத்து சிக்கிம் மற்றும் அசாம் மாநிலங்கள் உள்ளது. பீகார், ஜார்க்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் நீர் மேலாண்மையில் மோசமாக உள்ளது. தண்ணீர் பிரச்சினையை சரியான முறையில் கையாளும் மாநிலங்களில் தமிழகம் உட்பட 60 சதவீத மாநிலங்கள் மிக மோசமான முறையிலேயே கையாண்டு வருகின்றன.

ஒடிசா, சத்தீஷ்கார் போன்ற மாநிலங்கள மிக மோசமாக தண்ணீர் பிரச்சினையை கையாண்டு வருகின்றன எனவும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் நீர் வளங்கள் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு பற்றிய புரிதல் தொடர்பாக உடனடி தேவையுள்ளது என்பதை குறிப்பிடுகிறது.

One thought on “சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும்! நிதி ஆயோக் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *