இரும்பு கரங்களால் மக்களை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் :- ஸ்டெர்லைட் சம்பவம் ஒரு உதாரணம்!

Read Time:11 Minute, 44 Second
Page Visited: 70
இரும்பு கரங்களால் மக்களை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் :- ஸ்டெர்லைட் சம்பவம் ஒரு உதாரணம்!

உலகளாவிய கார்ப்பரேட் செயல்பாட்டில் ‘நிதி முதலாளித்துவம்’ உலகம் முழுவதும் தேசிய அரசுகளையும், அரசியல்களையும் தன்னுடன் இணைக்கும் வகையில் கொள்கையினை உருவாக்கிக்கொள்கிறது. விவசாயிகள், நடுத்தர தொழில்களுக்கு ஆதரவாக அரசுக்கள் செயல்பட்ட காலங்களே பொற்காலமாக இருந்தது. ஆனால் இன்றைய ஜனநாயகத்தில் இவையனைத்தும் மாறியுள்ளது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டும் அரசுக்கள் நிதி முதலாளித்துவ செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது, மாறாக வளர்ச்சியென்ற பெயரில் கண்களை மூடிக்கொண்டு முதலாளித்துவ கொள்கையுடன் நகர்கிறது.

ஜனநாயக அரசுக்கள் ஏழைகளுக்கு ஆதரவான குரலை எழுப்பலாம், ஆனால் உண்மை என்னவென்றால் தனியார் முதலீடுகள் மட்டுமே காப்பாற்றப்படுகிறது.

இதில் அதிர்ச்சிக்கரமான விஷயம் என்னவென்றால் அரசை தேர்வுசெய்த மக்கள் உரிமைக்காக போராடும் போது அவர்களை கட்டுப்படுத்துவதுதான். குடிமக்களின் உரிமையை நசுக்கி முதலாளித்துவ நலனுக்காக அரசுக்கள் செயல்படுவது முன்னெப்போதும் இல்லாத செயலாகவே உயர்கிறது. தொழில்வளர்ச்சி என்ற பெயரில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான சட்டங்களை இயற்றும் வகையில் ஜனநாயகம் உள்ளது? என்ற கேள்வியே வலுக்கிறது. அரசாங்கள் மற்றும் அரசியல்களை வளைக்கும் என்ற முதலாளித்துவத்தால், ஜனநாயகத்திற்கு ஆபத்து கிடையாது?. இன்றைய ஜனநாயகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் கைகள் பெருமளவு உயர்ந்துள்ளது, இது அரசியல் கொள்கை வகுப்பில் மிகப்பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தில் ஆக்டோபஸ் கரங்களால் மக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் நசுக்குகிறது.

மக்களின் நலனுக்காகத்தான் அரசு செயல்பட வேண்டும் என்ற நிலைமாறி பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு செயல்பட்டால் என்னவாகும்?.




தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் அரசு தன்னுடைய இரும்பு கரங்களைக் கொண்டு சொந்த மக்களையே கீழே தள்ளும் என்பதை காட்டுகிறது.

மக்களின் நிலம், வனம், தண்ணீர், காற்று என அனைத்தையும் பறிக்கிறது. மக்கள் அவர்களுடைய கலாச்சாரங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

ஜனநாயகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் பொதுமக்களின் நலனை பின்னுக்கு தள்ளுகிறது. நிதி முதலாளித்துவம் வெளிப்படையாகவே ஜனநாயகத்தை சிறையிடுகிறது. அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒரு வலுவான வலைப்பின்னல்களை கொண்டுள்ளார்கள். அரசியலை கையில் கொள்ளும் நிதி முதலாளித்துவம் மக்களின் உடமையை பறிக்கிறது. மக்களின் நிலம், வனம், தண்ணீர், காற்று என அனைத்தையும் பறிக்கிறது. மக்கள் அவர்களுடைய கலாச்சாரங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் அதிகாரமற்றவர்களாகவும், பாதுகாப்பற்றவர்களாவும் உணரும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

பங்குச்சந்தையில் 5 சதவிதம் இந்தியர்கள் கூட பங்குகொள்வது கிடையாது, அப்படியிருக்கையில் அதனுடைய வளர்ச்சியானது மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என்பதை உறுதி செய்யுமா?.

நிதி முதலாளித்துவம் சமத்துவமின்மையை உயரச்செய்கிறது. வளர்ச்சி, வளர்ச்சியென மார்தட்டும் அரசுக்கள் அடிப்படை மக்களின் நிலை என்ன என்பதை சிந்திக்க முன்வருவது கிடையாது. இந்திய பங்குசந்தையும், சர்வதேச கணிப்பு நிறுவனங்களும் வளர்ச்சியை பட்டியலிடலாம், ஆனால் மக்களின் நிலை?. பங்குச்சந்தையில் 5 சதவிதம் இந்தியர்கள் கூட பங்குகொள்வது கிடையாது, அப்படியிருக்கையில் அதனுடைய வளர்ச்சியானது மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என்பதை உறுதி செய்யுமா?. அரசுக்கள் பல்வேறு முக்கிய பொறுப்புளின் தன்னுடைய நிலையை விடுவித்து கொள்கிறது. தனியார் மயமாதலுக்கு வித்திடுகிறது.

கல்வி, மருத்துவம் என்பதை அரசு மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும். இப்போது அவை அனைத்தும் தனியார் பிடியில் சிக்கியுள்ளது. இருதுறையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசின் பணிகள் அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்படும் போது நிலை மோசமடையாதா?. அரசியல்கட்சிகளுக்கு கட்சியை நடத்தவும், தேர்தலை சந்திக்கவும் பெருமளவு பணத் தேவையுள்ளது. இவையனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பூர்த்திசெய்யப்படுகிறது. இவை, பொதுமக்களுக்கான கொள்கைகளை வகுக்கும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட் பின்புலம் கொண்ட பெரும் செல்வந்தர்கள் சட்டமன்றங்களுக்கு அடியெடுத்து வைப்பதற்கு ‘செக்’ வைக்க வேண்டும். இதனை உடனடியாக செய்யவில்லை என்றால் ஜனநாயகத்தின் அடிப்படை ஆட்டம் காணும் என்பதில் ஐயமில்லை.




உரிமைக்கான போராட்டம்

தூத்துக்குடியில் சுத்தமான சுற்றுசூழல் வேண்டும் என்ற மிகவும் அடிப்படை உரிமைக்காதான் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். நீதித்துறையும் அடிப்படை உரிமைகளை வலுப்படுத்த பல்வேறு தீர்ப்புகளை வழங்கினாலும், மாற்றம் காணப்படுகிறதா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் வேதிக் கழிவுகளாலும், மாசடைந்த காற்றாலும் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த பின்னர் ஆலை மூடப்பட்டது.

தூத்துக்குடியில் சுத்தமான சுற்றுசூழல் வேண்டும் என்ற நோக்கத்துடன் அடிப்படை உரிமைக்காதான் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். சுத்தமான சுற்றுசூழல் என்பது மக்கள் உரிமையில் மிகவும் முக்கியமானது, அவர்களுடைய அடிப்படை உரிமையாகும். நீதித்துறையும் அடிப்படை உரிமைகளை வலுப்படுத்த பல்வேறு தீர்ப்புகளை வழங்கினாலும், மாற்றம் காணப்படுகிறதா? என்ற கேள்வி தொடர்கிறது. சுற்றுசூழல் மாசுபாடு என்பது இன்று உலகளாவிய அளவில் ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய சவாலாகும், அதனை எதிர்க்கொள்ளும் வகையில் அரசுக்கள் செயல்பட வேண்டும்.

மத்திய பிரதேச மாநிலம் 1984 டிசம்பர் 2 ம் தேதி இரவு அமெரிக்க உர நிறுவனமான யூனியன் கார்பைடில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்றளவும் பாதிப்பின் தாக்கம் இருந்து வருகிறது. இப்போதுவரை யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்த இடத்தில் உள்ள ஆபத்தான ரசாயனக் கழிவுகள் அகற்றப்படவில்லை. இன்றைக்கும் போபால் நகரத்தின் நிலமும், நிலத்தடி நீரும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதே சுற்றுசுழல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மதுரை ஐகோர்ட்டு சொன்னது என்ன?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஜூன் 13-ல் விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையால் பயனில்லை என்றது.




“ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தெளிவாக இல்லை. ஆலையின் மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டதாக மட்டுமே அரசாணையில் கூறப்பட்டு உள்ளது. இது ஆலையை மூடுவதற்கு தீர்வாக இருக்காது. இந்த ஆலையால் தண்ணீர், காற்று மாசுபடுவது மட்டுமின்றி, தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்வது மாநில அரசு சம்பந்தப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டதால் ஆலைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 48 ஏ-ன் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அப்படி ஒரு நிலை எடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும். பொதுமக்களின் நலனுக்காக இந்த முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்துகிறது என்றது ஐகோர்ட்டு.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *