சென்னையின் நீராதாரத்தையே பாதிக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளும் பணியை மேற்கொள்ளும் தமிழக பொதுப்பணித்துறை அரசின் விதிமுறைகளை மீறுவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு கொசஸ்தலை ஆற்றையே நம்பியிருக்கிறது. இப்போது சென்னையின் நீர் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் கொஸ்தலை ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு: சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும்! நிதி ஆயோக் எச்சரிக்கை
மணல் குவாரிகள் தனியார் வசம் இருந்த போது லாப நோக்கத்தில் செயற்கையான மணல் தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மணல் தோண்டியெடுக்கபடுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அரசே குவாரிகளை ஏற்று நடத்தத் தொடங்கியது. தனியார் கைவசமிருந்த போது ஏற்பட்ட அத்துமீறலை தடுக்கும் வகையில் ஜூன் 2-ம் தேதி பொதுப்பணித்துறை மணல் கோரியை ஏற்றது. திருவள்ளூர் மாவட்டம் வழியாக பாய்ந்து செல்லும் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளும் பணிக்கு ஆட்சியரிடம் அனுமதிப்பெற்று பொத்துப்பணித்துறை பணியை தொடங்கியது.
ஆனால் ஆட்சியரின் உத்தரவை மீறும் வகையில் விதிமுறைகளை புறந்தள்ளி மணல் அள்ளபப்டுகிறது என செய்தி வெளியாகியுள்ளது.
14 ஏக்கரில் ஒரு மீட்டர் ஆழத்தில் மட்டுமே மணலை தோண்டியெடுக்கலாம் என்று ஆட்சியர் உத்தரவு கூறுகிறது. ஆனால் கோரி அமைந்துள்ள பகுதிக்கு நேரடியாக சென்று பார்த்தப்போது, பல்வேறு இடங்களில் 2 மீட்டருக்கு ஆழமாக தோண்டி மணல் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிலப்பகுதிகளில் அதற்கும் அதிகமான ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் விதிமுறை மீறலை ஒப்புக்கொள்ளும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை மணல் பிரிவு நிர்வாக பொறியாளர் கே. விஜயராகவன் பேசுகையில், “சில பகுதிகளில் நாங்கள் 0.7 மிட்டர் வரையிலே தோண்டியுள்ளோம். எனவே, ஆழமாக தோண்ட பகுதிகளுடன் அதனை சரிசெய்துவிடுவோம்,”என பதில் கூறியுள்ளார்.
மணல் கோரியில் இருந்து 12,584 லோடு மணலை எடுத்துச் செல்ல 2-யூனிட் லாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு கூறுகிறது. ஆனால் கிராம மக்கள் 6 மற்றும் 8 யுனிட் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார்கள். பெரிய லாரிகளை பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ளும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விதிமுறைகள் குடோனில் இருந்து பயனாளருக்கு கொண்டு செல்வதற்கு மட்டுமே பொருந்தும் என்கிறார்கள். இதனால் மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகமாக பொதுப்பணித்துறை அள்ளலாம்.
பாலம் சேதம் அடைவதை தடுக்கும் விதமாக மணல் குவாரி பாகாசாலை பாலத்தில் இருந்து 550 மீட்டர் தொலைவில் தொடங்க வேண்டும், ஆனால் 472 மீட்டர் தொலைவில் இருந்தே குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனை தவறுயென ஒப்புக்கொண்டுள்ள விஜயராகவன், அப்பகுதியில் மணல் போட்டு நிறுப்புவோம் என கூறியுள்ளார். மேலும் உத்தரவில் கட்டயாமென கூறப்பட்டுள்ள சிசிடிவி கேமரா அமைப்பு, லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தம் ஆகியவற்றிலும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.
குவாரி அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் தொலைவில் சிசிடிவி கேமரா காணப்பட்டாலும் ஒயர் இணைப்பு காணப்படவில்லை, லாரிகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தவில்லை என்று லாரி ஓட்டுநர்கள் கூறுகிறார்கள்.