மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகம்! காங்கிரசுக்கும் ‘செக்’

Read Time:8 Minute, 9 Second
Page Visited: 73
மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வியூகம்! காங்கிரசுக்கும் ‘செக்’

புதுடெல்லி,

மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக வியூகம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கு ‘செக்’ வைத்துள்ளன.

2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கைய எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. எதிர்க்கட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவும் முன்னெடுக்கிறார்கள். இருப்பினும் காங்கிரஸ் இல்லாத பிற கட்சிகளின் கூட்டணி வெற்றிபெறுமா? என்ற கேள்வியும் வலுக்கிறது.

காங்கிரசும் மீண்டும் கூட்டணியை வலுப்படுத்த முயற்சிக்கிறது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி காங்கிரசுடன் இணைவதை எதிர்க்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க முடியாது என மம்தா பானர்ஜியும் கூறிவிட்டார். பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசமும் காங்கிரசுடன் இணைவதற்கு தயக்கம் காட்டுகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பிஜே குரியனின் பதவிகாலம் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. மீண்டும் குரியன் போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை. துணை சபாநாயகரை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். இத்தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கும் ‘செக்’ வைத்துள்ளன. காங்கிரஸ் அல்லாத மற்றும் காங்கிரஸ் ஆதரிக்கும் ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற முடிவை பிற எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளன.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.

முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சுகெந்து சேகர் ராய் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரசன்னா அச்சார்யாவை களமிறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பிஜு ஜனதா தளம் முன்னிலை வகிக்கிறது.

மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களை கொண்டுள்ள, ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டாமல் ஒரே தொலைவில் விலகி வருகிறது. இதுவரையில் அக்கட்சி எந்தஒரு முடிவையும் எடுக்கவில்லை. பிராந்திய கட்சிகளும் பிஜு ஜனதா தளத்தை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக கூறப்படுகிறது. பா. ஜனதாவிற்கு எதிராக கூட்டணி என்ற கோரிக்கை வலுக்கும் நிலையில் பிஜு ஜனதா தளம் கூட்டணி தொடர்பாக எந்தஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, அக்கட்சியை தங்களுடைய வரிசையில் இழுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்படுகிறது.

நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசித்துள்ளதாகவும் தெரிகிறது. பாரதீய ஜனதா கட்சி மாநிலங்களவையின் தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

245 எம்.பிக்களை கொண்ட மாநிலங்களவையில் பாரதீய ஜனதாவுக்கு 69 எம்.பிக்களும், இரண்டாவது இடத்தில் உள்ள காங்கிரசுக்கு 51 எம்.பிககளும் உள்ளனர். மாநில கட்சிகளின் முடிவே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 245 உறுப்பினர்களை கொண்ட அவையில் வெற்றிப்பெற 122 வாக்குகள் தேவையாகும். பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (6 எம்.பி.க்கள்) கட்சிகள் ஏற்கனவே காங்கிரசுக்கு ஆதரவு கிடையாது என அறிவித்துள்ளது, எனவே இக்கட்சிகளின் முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இப்போத உறுப்பினர்கள்படி எதிர்க்கட்சிகள் வெற்றியை நெருங்கியுள்ளது, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளுக்கு 115 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு 108 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (6 உறுப்பினர்கள்), ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் (2 உறுப்பினர்கள்) மற்றும் பிஜு ஜனதா தளம் (9 உறுப்பினர்கள்) முக்கிய பங்கு வகுக்கிறது. 10 வருடங்களாக மாநிலங்களவை சபாநாயகர் பதவியை வைத்திருக்கும் காங்கிரசும் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகயில்லை என்றும் தெரிகிறது.  இவ்விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியிடம் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக வரிசையாக எழும் கட்சிகள் மத்தியிலும் காங்கிரசுக்கு எதிர்ப்பு இருக்கிறது.

கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தன்னுடைய வியூகத்தை மாற்றி, சற்று இறங்கிவந்து மதசார்பற்ற ஜனதா தளத்துடன் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி வைத்து இருந்தால் முடிவு மாறியிருக்கும், ஆட்சியும் தக்கவைத்து இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் 2019 தேர்தலை மையமாக கொண்டு செயல்படும் காங்கிரசுக்கு கூட்டணியை ஒருங்கிணைப்பது என்பது முக்கியமானதாக உள்ளது. மூன்றாவது எதிர்க்கட்சிகள் வரிசையிலும் காங்கிரசுக்கு எதிர்ப்பு இருப்பதால் அக்கட்சி தனியாக களமிறங்குமா? அல்லது பா.ஜனதாவை எதிர்க்கும் வகையில் ஆதரிக்குமா? என்பதை பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *