கதாநாயகியை மையமாக வைத்து உருவாகவுள்ள படத்தில் நடிக்க நடிகை சமந்தா ஒப்புந்தமாகியுள்ளார்.
சமீபகாலமாக கதாநாயகிகளை மையமாக கொண்டு உருவாகும் படங்களும் வெற்றியை பதிவு செய்து வருகிறது. முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால் ஆகியோரும் இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இப்போது இவ்வரிசையில் நடிகை சம்பந்தா இணைந்துள்ளார்.
சமந்தா தற்போழுது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ‘யூ டர்ன்’ ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த ‘யூ டர்ன்’ல் ‘விக்ரம் வேதா’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு கன்னடத்தில் பெரும் புகழை பெற்றுதந்தது.
ராம்சரண், சமந்தா நடிப்பில் வெளியான நேரடித் தெலுங்குப் படமான ‘ரங்கஸ்தலம்’ தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சமந்தாவுக்குக் கறுப்புநிற ஒப்பனை பூசி கிராமத்துப் பெண்ணாக வந்திருப்பார். கிராமத்தை சேர்ந்த ராமலட்சுமியாக (சமந்தா) இன்றும் ரசிகர்கள் மத்தியில் சமந்தா பதிவாகிவிட்டார், அந்தளவு படத்தில் கவனம் செலுத்திருப்பார். இந்த படம் வெளியானதும்,
நல்ல கதாபாத்திரங்கள், சிறப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாராலும் என்னைப் புறக்கணிக்க முடியாது என நினைக்கிறேன் என்று குறிப்பிப்பிட்டு இருந்தார்.
ரங்கஸ்தலம்ம, காநடி, அபிமன்யுடு என சமந்தா நடிப்பில் தெலுங்கில் அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரிசாயா, கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள தன்னுடைய திரைக்கதையை சமந்தாவிடம் கூறியுள்ளார். கதையை கேட்ட சமந்தா உடனே நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.