எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைகிறது

Read Time:7 Minute, 18 Second
Page Visited: 102
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைகிறது

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ரூ. 1,100 கோடி செலவில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மருத்துவமனையில் மதுரையில் அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை அமையும் இடத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 4-வழி இணைப்பு கொடுக்கப்பட வேண்டும். இரண்டு வெவ்வேறு மின்உற்பத்தி மையங்களில் இருந்து 20MVA மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் இல்லாமல் நிலம் வழங்கப்பட வேண்டும். அவ்வழியாக குறைந்த மின்அழுத்த லைன்கள் இல்லாததை உறுதிசெய்ய வேண்டும். மருத்துவமனைக்கான கட்டுமான திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் ஆகிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய தகவல்கள்:-

2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்குவதற்கு கருத்து அனுப்பப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து இடங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையவேண்டும் என மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டுமென தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனாலும் மத்திய அரசு மருத்துவமனை தொடங்கும் இடம் பற்றியும், மருத்துவமனை பற்றியும் எந்தவொரு தெளிவான பதிலையும் சொல்லவில்லை. மதுரையில்தான் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது. இவ்விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றது. இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக முதல்-அமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இது விமர்சனத்திற்கு உள்ளானது.

இறுதியில் மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியது.

இதற்கிடையே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்தது. மதுரையில் உள்ள அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஆண்டுதோறும் 27 லட்சம் பேர் வெளி நோயாளிகளாகவும், 9 லட்சம் பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். எனவே, தென்மாவட்டங்களை இணைக்கும் மதுரையில் மருத்துவமனை அமைக்கப்பட்டால் கன்னியாகுமரி முதல் திருச்சி வரை உள்ள மாவட்டங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளைக் கொண்டதும் மதுரைதான். அதனால், மதுரையில் மருத்துவமனை அமைந்தால்தான் மக்களுக்கு வசதியாக இருக்கும் என அனைத்துத் தரப்பு மக்களும், பல்வேறு கட்சியினரும் குரல்கொடுத்து வந்தனர்.
எப்படியும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில்தான் தொடங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தோப்பூரில் எரிவாயு குழாய் கடக்கிறது. அதனால், எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு தொடங்கமுடியாது என மத்தியக் குழு தெரிவித்தது. இதையடுத்து, ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை’ என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மத்திய அரசுக்கு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இப்போது மதுரையில் மருத்துவமனை அமைப்பதற்கு சாதகமான தகவல் வெளியாகியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவமனை அமைப்பது மதுரை தோப்பூரிலா அல்லது தஞ்சை செங்கிப்பட்டியிலா என்பதில் மதுரையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் இடையே அதிகாரப்பூர்வமான தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்ததாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *