த்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

Read Time:3 Minute, 1 Second

ஹரி இயக்கத்தில் விக்ரம் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விக்ரம் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இரண்டாம் பாகத்திலும் த்ரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதும் த்ரிஷா திடீரென்று படத்திலிருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பாகத்தில் வெளியிட்டுள்ளார். படக் குழுவினர்களுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க சமரச முயற்சி எடுத்தார்கள். ஆனால் நடிக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் படக்குழு த்ரிஷாவிற்கு பதிலாக வேறு நடிகையை தேடினர். ரசிகர்களும் த்ரிஷாவிற்கு பதிலாக யார் நடிக்கப்போகிறார் என ஆவலாக எதிர்பார்த்து இருந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

தற்போது படக்குழுவினர் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேசை ஒப்பந்தம் செய்துள்ளனர்.இதனை ஸ்ரீதர் பிள்ளை மற்றும் தமீன்ஸ் பிலிம்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் செக்க சிவந்த வானம், துருவநட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மே 17 ஆம் தேதியும் ட்ரைலர் ஜூன் 2 ஆம் தேதியிலும் வெளியானது.

சாமி-2 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகளும் ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவு பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *