பா.ஜனதா தவறான அரசாங்கத்தின் சின்னமாகியுள்ளது

Read Time:11 Minute, 15 Second

ஆளும் பா.ஜனதாவின் விஷத்தன்மையான அரசியல் நடைமுறையால் இந்தியாவின் ஆன்மாவிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் 2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்குவந்த பின்னர் இதுவரையில் இல்லாத வகையில் இந்தியா மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளது என்று நாம் அனைவரும் நம்பும் வகையிலான பிரசாரத்தை பா.ஜனதாவின் செய்தித் தொடர்பாளர்கள், டுவிட்டர்வாசிகள் அடங்கிய பா.ஜனதாவின் பிரசார பீரங்கிப்படை மேற்கொண்டு வருகிறது. ஆட்சிக்குவந்த 4 ஆண்டுகளாகவே அரசு அபிவிருத்தி அரசியலை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டே செல்கிறது, ஆனால் அதற்கான அடிப்படையை புறக்கணித்துள்ளது.

ஆனால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கள் எப்படி இன்று அழிக்கப்படுகிறது, மக்களின் தீர்ப்பு எப்படி புறக்கணிக்கப்படுகிறது, கூட்டாட்சி முறை எப்படி திசைதிருப்பப்படுகிறது என்பதை இன்று நாம் பார்த்துதான் வருகிறோம்.

இன்று சுயநலம் மட்டுமே அரசின் அடித்தளமாகியுள்ளது; எந்தஒரு கொள்கையும் இல்லாத அரசியல் அதன் முத்திரையாகியுள்ளது. பா.ஜனதா உருவாக்கிய அரசியல் சந்தர்ப்பவாதத்தின் கட்டமைப்பு ஜனநாயகத்தின் ஒவ்வொரு கொள்கையையும் துஷ்பிரயோகம் செய்ய தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நிறுவனங்களை பலவீனப்படுத்த அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், அரசியல் எதிர்தரப்பினரை இழிவுப்படுத்தும் வகையில் தீய அரசியலை மேற்கொள்ளுதல், தங்களுடைய திட்டங்கள் வெற்றியென மிகைப்படுத்தி கூறுதல், தேவை முடிந்ததும் தங்களுடைய வசதிக்காக சமயத்தில் கூட்டணி கட்சிகளை கழட்டிவிடுதல் ஆகியவற்றிற்கு துணை நிற்கும் அரசு பரவலாக பயன்படுத்தும் ஆயுதம்; சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைதியாக இருப்பது.அமைதியாக இருத்தல் என்பது பா.ஜனதா ஆயுத கிடங்களில் மிகவும் சாதகமான ஆயுதமாகும். டுவிட் செய்வதை விரும்பும் பிரதமர், 2015-ம் ஆண்டு முகமது இக்லாக் கொல்லப்பட்டதில் இருந்து தொடரும் கும்பல் தாக்குதல் தொடர்பாக அமைதியாக இருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் பசுவை கடத்தவந்தவர்கள் என்று இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நாம் பார்த்தோம்; அசாம் மாநிலம் ஹார்பி-அங்லாங்கில் இருவர் குழந்தையை திருட வந்தவர்கள் என்று கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர். ராம நவமியின் போது பீகார் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் வன்முறை நேரிட்டது. பாரதீய ஜனதா இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது, கொலைகார கும்பலின் ஒரு ராணுவத்தை தோற்றுவித்துள்ளது, அது சட்ட விதிகளைப் பற்றி கவலையை கொள்ளாது.

இதுபோன்று திரும்ப முடியாத முனையை நோக்கி வேகமாக பயணிப்பது என்பது நம்முடைய தேசத்திற்கு நல்லது கிடையாது. இப்படி வெறுப்பை பரப்புவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுப்பதில் பா.ஜனதா தோல்வியை தழுவியது ஏன்? மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அவருடைய பணியை செய்த காரணத்திற்காக ட்ரோல் செய்யப்பட்ட போது மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவர் கூட அவருக்கு துணை நிற்காதது ஏன்? பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை தொடர்ந்து பின்பற்றுபவர்களால் இதுபோன்று ட்ரோல் செய்யப்படுவது என்பது ஒரு தற்செயலான நிகழ்வா?

– ஜோதிராதித்ய சிந்தியா (காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கொறடா, முன்னாள் மந்திரி)

“பேட்டி பச்சோ பேட்டி பதோ” (பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) என்பது பா.ஜனதா அரசின் தொடர் பேச்சாக இருந்து வருகிறது, ஆனால் அவர்களுடைய இரட்டை நிலைப்பாடு என்பது அவமானத்திற்குரியது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கான பாதுகாப்பாற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உன்னோவ் பா.ஜனதா எம்.எல்.ஏ. பாலியல் பலாத்கார குற்றவாளி, மறுபுறம் கதுவா பாலியல் பலாத்காரத்திற்கு ஆதரவாக பா.ஜனதா முன்னாள் அமைச்சர்கள் பேரணியை நடத்தினார்கள். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், அவர்களுக்கு கல்வி அளிப்போம் என்ற திட்டம் தொடர்பான சிஏஜி அறிக்கையானது (தணிக்கை அறிக்கை) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, நிதி வழங்கல் ஆகியவற்றில் குறைபாடு உள்ளதை காட்டுகிறது, பலவீனமான ஒரு கண்காணிப்பு முறையால் 2015-ல் அரியானா மற்றும் பஞ்சாப்பில் பல்வேறு மாவட்டங்களில் பாலின விகிதம் பெரும் சரிசை சந்தித்துள்ளது.எஸ்சி/எஸ்டி பிரிவினரின் நலனை பாதுகாப்பதில் மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை சம்பவங்கள் ஆகியவற்றைத் தடுக்கும் வகையிலான எஸ்சி/எஸ்டி சட்டத்தின் ஷரத்துக்களை நீர்த்துப்போக செய்ய வழிவகை செய்துள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிலப்பிரச்சனை காரணமாக தலித் விவசாயி ஒருவர் மீது மண்ணெண்ணை ஊற்றி கும்பல் (குற்றவாளிகளில் ஒருவர் பா.ஜனதாவின் ஒபிசி பிரிவை சேர்ந்தவர்) ஒன்று தீ வைத்தது. தலித் பெண்கள் வெளியிட்ட கூட்டறிக்கையின்படி, 33 சதவித எஸ்சி பெண்கள் அவர்களுடைய 15 வயதில் இருந்து உடல்சார்ந்த வன்முறையை எதிர்க்கொள்கிறார்கள், எஸ்டி பிரிவை சேர்ந்த 26 சதவித பெண்கள் வன்முறையை எதிர்க்கொள்கிறார்கள். சட்டபூர்வமான அணுகல் மற்றும அதிகாரிகள் இடையிலான வலைபின்னல் காரணமாகவே நிலமை மோசமாகியுள்ளது. அதிகாரிகள் குற்றம் செய்தவர்களுக்கு பாதுகாப்பாக நிற்பதால்தான். சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் மாநிலங்களை சார்ந்தது என்று மத்திய அரசு சொல்லிவிடலாம். ஆனால் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் தலித், பழங்குடியின மற்றும் பிற சிறுபான்மையின குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு எதிரான வன்முறையும் இதே நிலையில்தான் உள்ளது.

ஒரு விஷயத்தில் நிலைமை மோசம் அடையும் போது தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வது என்பது பா.ஜனதாவிற்கு புதியது கிடையாது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் வழங்கிய தீர்ப்பையும் மீறி பா.ஜனதா மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணியை வைத்தது. கூட்டணி அமைந்தது முதலே ஒரு இணக்கம் கிடையாது. ஆனாலும் தொடர்ந்தார்கள். காயம் அடைந்த பள்ளத்தாக்கு பகுதிக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாக இருந்தது, ஆனால் பா.ஜனதா தன்னுடைய படை பலத்தை பிரயோகம் செய்தது, வன்முறைக்கு வழிவகை செய்தது. 2003 பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் சிதைவடைந்துள்ளது. பா.ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கூட்டணி ஒரு நம்பகமான அரசாங்கத்தால் வளரவில்லை. தார்மீக பொறுப்பு மற்றும் அரசியல் தலைமை என பேசும் பா.ஜனதா இப்போது தேர்தலை குறிவைத்து மாநிலத்தை புறந்தள்ளியுள்ளது. பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ‘ஜமூரியத்’, ‘இன்சானியத்’, ‘காஷ்மீரியத்’ என்பதை பேசினார், ஆனால் மறந்துவிட்டார்.பா.ஜனதாவின் சந்தர்ப்பவாதமும், பாசாங்குத்தனமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களை நோக்கிய அவர்களுடைய ஆதிக்கம் மற்றும் ஏமாற்றும் அணுகுமுறையானது ஒத்துழைப்பு கூட்டாட்சியின் ஆற்றலையும் பாதிக்கிறது. நம்முடைய வெளிநாட்டு உறவும், பொருளாதாரமும் சிக்கலில் உள்ளது. வேலைவாய்ப்பின்மை உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, அரசு நிறுவனங்களின் செயல்பாட்டில் சுயாட்சி, தேசிய பாதுகாப்பு நிலைப்பாடு, பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே அதிகரித்துவரும் அதிருப்தி ஆகியவை பா.ஜனதா தலைமையிலான அரசாங்கத்தை முற்றுகையிடுவதால், அதனை முடிவுக்கு கொண்டுவருகிறது.

பா.ஜனதா இப்போது தவறான ஆட்சியின் சின்னமாக உள்ளது. இப்போது நம்முடைய பாதிக்கப்பட்ட தேசம் அமைதியை நாடுகிறது, ஆனால் பா.ஜனதாவினர் அரசியலமைப்பை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துவதிலே குறியாக உள்ளனர். 71 ஆண்டுகளில், இந்தியா ஒருபோதும் இதுபோன்ற இருண்ட நாட்கள் பார்த்ததில்லை, விரோதத்தை உருவாக்கவும், அருவருப்பான செயல்களை நியாயப்படுத்தவும், தேசிய உணர்வுகளை மூழ்கடித்துவிடவும் ஜாதி, மதம், பாலினம் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் அடிப்படையான ஆன்மா வளர்ச்சியடையாமல் பொருளாதார முன்னேற்றம் என்பது பயனற்றது. இப்போது, ஆளும் பா.ஜனதாவின் விஷத்தன்மையான அரசியல் நடைமுறையால் இந்தியாவின் ஆன்மாவிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

– ஜோதிராதித்ய சிந்தியா (காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கொறடா, முன்னாள் மந்திரி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *