பொறுப்பு மற்றும் பணியிலிருந்து விலகுவதை நிறுத்த வேண்டும் என கெஜ்ரிவால் அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது

Read Time:8 Minute, 20 Second

ஆம் ஆத்மி கட்சி இந்த தீர்ப்பை அவர்களுக்கான வெற்றியென்று மக்களை நம்ப செய்ய முடியாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 239ஏஏ-ஐ உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. துணை நிலை ஆளுநருக்கான ஒதுக்கப்பட்ட உரிமை, அவருக்கானதுதான்.

தீர்ப்பு தொடர்பான என்னுடைய ஆய்வின்படி, காவல்துறை, நிலம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தவிர மற்ற துறைகளுக்கு டெல்லி அரசுதான் முழுப் பொறுப்பு என்பதை உறுதிசெய்ய உச்சநீதிமன்றம் முயற்சித்துள்ளது. இனி, துணை நிலை ஆளுநர் செயல்பட அனுமதிக்கவில்லை என்று கூறி ஆம் ஆத்மி கட்சி தப்பிக்க முடியாது. அவர்கள், அவர்களுடைய பணியை செய்ய வேண்டும், இது கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்களும் வலியுறுத்தியது.

டெல்லி அரசு குழாய் பதிப்பது அல்லது மின்சார ஒயர்களை பதிப்பது அல்லது சாலைகளை அமைப்பது அல்லது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை யார் தடுத்து நிறுத்தியது? பதில் யாரும் கிடையாது. துணை நிலை ஆளுநர் அதனை தடுத்து நிறுத்தவில்லை. துணை நிலை ஆளுநர் அரசின் ஆலோசனைக்கு உட்பட்டவர், ஆனால் அவர் சட்டவிரோதமான மற்றும் அதிராகரமற்ற திட்டங்களை முன்னெடுக்க அனுமதியளிக்க வேண்டும் என்பது கிடையாது. ஒவ்வொரு சட்டவிரோதத்திற்கும் துணைநிலை ஆளுநர்தான் பொறுப்பு என்று ஆம் ஆத்மி கூறுகிறது. அரசியலமைப்பு விதிகளின்படி, யாரும் டெல்லியின் ‘பாஸ்’ ஆக முடியாது.

ஆளும் கட்சி டெல்லிக்கான சேவகர்கள் மட்டுமே. டெல்லிக்கு ஆம் ஆத்மி அரசு தன்னுடைய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும், துணை நிலை ஆளுநரின் தலையீடு என அதற்கு பின்னால் மறைந்துக்கொள்ளகூடாது என்பதை உச்சநீதிமன்ற முடிவு உருவாக்கியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் போன்ற பிரச்சனைகளில் அழுதுக்கொண்டிருப்பது தேவையற்றது. அரியானா மோசமான தண்ணீரை டெல்லிக்கு கொடுக்கிறது எனக்கூறி, தண்ணீர் வழங்க முடியாது என ஆம் ஆத்மி அரசு கூற முடியாது. இதற்கு எங்களிடம் எளிமையான தீர்வு உள்ளது; அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும், அதேபோன்று டெல்லியில் இருந்து அரியானா செல்லும் தண்ணீரையும் ஆய்வு செய்ய வேண்டும். டெல்லியில் இருந்து பரிதாபாத் செல்லும் தண்ணீர்தான் அதிகமாக மாசுபாடு ஆகியுள்ளது. டெல்லியில் உள்ள அரசு செயல்படாடத அரசு, அராஜகமான அரசு. இதனை தீர்ப்பு குறிப்பிட்டுள்ளது.

“அராஜகவாதத்திற்கு இடம் கிடையாது. சிலவேளைகளில் வாதிடலாம், வேறுபட்ட சூழல்களில், ஒரு அறிவுப்பூர்வமான அராஜகவாதியாக இருக்கலாம். ஆனால் அது அரசியலமைப்பு ஆட்சி மற்றும் சட்ட விதிமுறைகளில் நுழைவுக்கு இடம் கிடையாது” என்று கூறுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசு செயல்பட வேண்டும் என்பதையும், அரசாங்கம் என்று வந்துவிட்டால் அதனுடைய அராஜகமான நடவடிக்கை பலன் அளிக்காது என்பதையும் தெளிவாக கூறிவிட்டது.

டெல்லிக்கு பணியாற்றவே மக்கள் வாக்களித்தார்களே தவிர, துலை நிலை ஆளுநர் அலுவலகத்தில் மறைந்துக் கொள்வதற்கு கிடையாது. ரூ. 5,500 கோடி பட்ஜெட்டில் எத்தனை சாலைகளை ஆம் ஆத்மி அரசு போட்டுள்ளது, எத்தனை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளது? டெல்லி முதல்-மந்திரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் குடியேறிவிட்டார், டெல்லியின் செயல்படாத தலைவர். உச்சநீதிமன்றத்தின் தெளிவு ஆம் ஆத்மி அரசின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டுவரும், பொறுப்பு அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி அரசு உண்மையில் இருந்து விலகி வெளிப்படையாகவே, பொய்யான கருத்துக்களை உற்பத்தி செய்கிறது, முதல்-மந்திரி தீர்ப்பை வெற்றி என்கிறார். துணை முதல்-மந்திரி மாநிலத்திற்கு தனி மாநில அந்தஸ்துக்கான எங்களுடைய போராட்டம் தொடரும் என கூறியுள்ளார். ஆம் ஆத்மி என்ன விரும்புகிறதோ அதனை மட்டும் உச்சநீதிமன்றம் கொடுக்கவில்லை என்பதை இது தெளிவுப்படுத்தி காட்டுகிறது.
யூனியன் பிரதேசமான டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து என்பது சட்டத்தின் கீழ் ஒரு சிக்கலான கேள்வியாகும். டெல்லி, பாராளுமன்றம் போன்ற முக்கியமான அரசு மையங்களை கொண்டுள்ளது. வாஷிங்டன், டோக்கியோ போன்று அனைத்து தேசிய தலைநகரங்களும் மத்திய படைகளின் ஆளுகைக்கு கீழ் உள்ளது. இதனால்தான் டெல்லிக்கு என்று சிறப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டது, மத்திய அரசுக்கு சில பொறுப்புகளும், தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு சில பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசுசாங்கம் தொடர்ந்து போரிடும் என்று கூறுவது அவர்கள் அவர்களுடைய பணியை செய்யப்போவது கிடையாது, மாறாக அராஜகவாதி என்று நிரூபிக்கிறார்கள்.

மக்கள் மத்தியில் பிரதமரின் புகழ் தெளிவாக உள்ளது. டெல்லி முதல்-மந்திரி அரசு வேலையை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவர் ஆட்சியின் முறையை முற்றிலும் தோல்வியடையச் செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி இந்த தீர்ப்பை அவர்களுக்கான வெற்றியென்று மக்களை நம்ப செய்ய முடியாது.

துணை நிலை ஆளுநர் தேர்வு செய்யப்பட்ட அரசு அனுப்பும் கோப்புகளை பார்ப்பதுடன், தன்னுடைய அக்கறையும் தொடர்வார். இந்த கோப்புகள் மூலம் சோதனையிடப்படாத நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தம் வழங்குவதை எப்படி துணை நிலை ஆளுநர் அனுமதிக்க முடியும்? இதுபோன்ற கோப்புகளில் துணை நிலை ஆளுநர் கையெழுத்திட்டால் அவர்கள்தான் பொறுப்பு ஆவார்கள். இப்போது உச்சநீதிமன்றம் முதல்-மந்திரியும், அமைச்சரவையும்தான் பொறுப்பு என்று கூறியுள்ளது. ஏதாவது தவறு நேரிட்டால், முதல்-மந்திரிதான் பொறுப்பு. துணைநிலை ஆளுநர் கிடையாது. இப்போது தீர்ப்பு துணை நிலை ஆளுநர் மீது இருந்த பணிச்சுமையை குறைத்துள்ளது, மிகவும் சிறந்தது.
பொறுப்பு மற்றும் பணியிலிருந்து விலகுவதை நிறுத்த வேண்டும் என ஆம் ஆத்மி அரசிடம் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஓரே விவகாரத்திற்கு இரண்டு சட்டங்கள் இருந்தால் மத்திய அரசின் சட்டமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. டெல்லிக்காக தொடர்ந்து போராடுவோம் என ஆம் ஆத்மி வேண்டுமென்றால் கூறலாம், ஆனால் இங்கு இந்தஒரு போராட்டமும் கிடையாது என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது.

நன்றி தி பிரிண்ட்

– மீனாட்சி லேகி (பா.ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *