4 வருடங்களில் ‘மிகப்பெரிய மத கலவரங்களை நடைபெறவில்லை’ என பா.ஜனதா சொல்வது உண்மையா?

Read Time:8 Minute, 17 Second

4 வருடங்களில் ‘மிகப்பெரிய மத கலவரங்களை நடைபெறவில்லை’ என்ற பா.ஜனதாவின் கூற்று பொய் என்று நிரூபிக்கும் வகையில் மத்திய அரசின் அறிக்கைகள் உள்ளது.

சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசுகையில், மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் மிகப்பெரிய மத கலவரங்கள் நடைபெறவில்லை. மோடி அரசு அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பணியில் ஈடுபட்டுள்ளது. சில சம்பவங்கள் நடைபெற்றாலும், மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு ஸ்திரமான மற்றும் தெளிவான செய்திகளை அனுப்புகிறது. ராஜஸ்தான், அரியானா அல்லது உத்தரபிரதேசமாக இருக்கட்டும், 24 மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது.

இது சமூக வலைதள காலம். ஆனால் மாலியானா மற்றும் பாகல்பூரில் (காங்கிரஸ் ஆட்சியின் போது 80களில் மதகலவரம் ஏற்பட்ட இடங்கள்) சமூக வலைதளங்கள் கிடையாது. இப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது உள்ளது. குற்றங்களை செய்பவர்கள், வெறுப்பை ஏற்படுத்தும் செய்தி மக்களுக்கு செல்ல வேண்டும், வைரலாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்று கூறினார்.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையானது பா.ஜனதாவின் கூற்றை பொய்யாக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசின அறிக்கையை ஆய்வு செய்துள்ள Factchecker இணையதளம் இருந்து 2000-த்திற்கும் அதிகமான மதவாத மோதல்கள் நடந்துள்ளது, இதில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர் எனறு தெரிவிக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, “பெரிய” மதவாத மோதல் சம்பவம் என்றால் 5 பேருக்கு மேல் உயிரிழப்பது அல்லது 10-க்கும் அதிகமானோர் காயம் அடைவது. ஒருவர் உயிரிழப்பு அல்லது 10 பேர் காயம் என்பது “முக்கியமானது அல்லது முக்கியத்துவம் வாய்ந்தது (“important or significant”)”. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, 2017-ம் ஆண்டில் மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் பெரிய மதவாத மோதல் பதிவாகியுள்ளது. 2016-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் ஹாசிநகரிலும், 2014-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஷகாரன்பூரிலும் பதிவாகியுள்ளது. 2015-ம் ஆண்டில் மட்டும் பெரிய மதவாத மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 6, 2018 மற்றும் பிப்ரவரி 7, 2017 -ல் பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சகத்தின் பதிலில், 2017-ம் ஆண்டு இறுதி வரையில் இந்தியாவில் 2920 மதவாத மோதல்கள் நடைபெற்றுள்ளது, இதில் 389 பேர் உயிரிழந்துள்ளார்கள். 8,890 பேர் காயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 4 வருடங்களில் அதிகமாக 645 மதவாத சம்பவங்கள் நடந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மக்கள் தொகையில் 9-வது இடம் பிடிக்கும் கர்நாடகாவில் 379 சம்பவங்களும், இரண்டாவது அதிகமான மக்கள் தொகையை கொண்ட மராட்டியத்தில் 316 சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. மதவாத மோதல்களில் உயிரிழப்பு அதிகமான நேரிட்ட மாநிலங்களிலும் உத்தரபிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 2014-17 காலகட்டங்களில் 121 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானில் 36 பேரும், கர்நாடகாவில் 35 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களில் இந்திய தண்டனை சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் அளித்த பதிலில் குறிப்பிடப்படவில்லை. சமய காரணிகள், நிலம் மற்றும் சொத்து தகராறுகள், பாலியல் தொடர்பான குற்றங்கள், சமூக ஊடகங்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்றவை இச்சம்பவங்களுக்கு காரணியாக காரணியாக உள்ளது என மத்திய அரசு மாநிலங்களவையில் மார்ச் 14-ம் தேதி குறிப்பிட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களில் நடந்த மதவாத கலவரங்கள்/சம்பவங்கள்

 1. ஷ்காரன்பூர், உத்தரபிரதேசம், ஜூலை 25, 2014.
 2. பாலாப்கார்க், அரியானா, மே 25, 2015.
 3. வடக்கு கர்நாடகா (முதூல், சிக்கொடி, சுர்பூர், தார்வாத், கவுஜாலாஜி, பெல்காம்). செப்டம்பர் 23-28, 2015.
 4. நாதியா, மேற்கு வங்காளம், மே 5, 2015.
 5. மால்டா, மேற்கு வங்காளம், ஜனவரி 3, 2016.
 6. ஹாசிநகர், மேற்கு வங்காளம், அக்டோபர் 12, 2016.
 7. துலாகார்க், மேற்கு வங்காளம், டிசம்பர்  13, 2016.
 8. ஷகாரன்பூர், உத்தரபிரதேசம், மே 5, 2017.
 9. பாதுரியா, மேற்கு வங்காளம்,  ஜூலை 4, 2017.
 10. முசாப்பர்நகர், உத்தரபிரதேசம்,  செப்டம்பர் 7, 2017.
 11. பிமா கோரெகான், புனே, மராட்டியம், ஜனவரி 1, 2018.
 12. காஸ்காஞ், உத்தரபிரதேசம், ஜனவரி 26, 2018.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) தேசம் முழுவதும் நடைபெறும் குற்றங்களை பதிவுசெய்து வருகிறது. கலவரங்கள் இந்திய தண்டனை சட்டம் 147 முதல் 151 வரையிலான பிரிவுகளில் பதிவு செய்யப்படுகிறது. மதம் மற்றும் பிறப்பு இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பகைமைகளை ஊக்குவித்தல் தொடர்பான வழக்குகள் இந்திய தண்டைனை சட்டம் பிரிவு 153ஏ கீழ் பதிவு செய்யப்படுகிறது. 2016-ம் ஆண்டில் 61,974 கலவரங்கள் இந்திய தண்டனைச் சட்டம் 147 முதல் 151 மற்றும் 153ஏ பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுவே 2014-ம் ஆண்டில் 66,042 ஆக இருந்தது. 6 சதவிதம் குறைந்துள்ளது. என்சிஆர்பி தகவலின்படி 2014 – 2016ல் 2,885 மதவாத கலவரங்கள் பதிவாகியுள்ளது.

2016-ல் 869 மதவாத கலவரங்கள் பதிவாகியுள்ளது, அதிகமாக அரியானாவில் 250 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இந்திய மக்கள் தொகையில் 17-வது இடம்பிடிக்கும் ஜார்க்கண்டில் 176 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 2014-ம் ஆண்டுடன் (1,227 சம்பவங்கள்) ஒப்பீடுகையில் 29 சதவிதம் குறைந்துள்ளது. மதம் மற்றும் பிறப்பு இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பகைமைகளை ஊக்குவித்தல் தொடர்பான 153ஏ பிரிவின் கீழ் 2016-ம் ஆண்டில் 447 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2014-ம் ஆண்டு 323ஆக இருந்தது. 2014 மற்றும் 2016-ல் மொத்தமாக இதுபோன்ற பகமையை உருவாக்குதல் தொடர்பாக 1,148 சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் 2016-ல் உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிகமான சம்பவங்கள் (109) நடைபெற்று உள்ளது. இதற்கு அடித்தப்படியாக மேற்கு வங்காளம் (51) மற்றும் கேரளாவில் (48) நடந்துள்ளது.மிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் சர்மா பேசுகையில், “சுற்றுச்சூழல் அம்சங்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் மீறியது தொடர்பாக நாங்கள் வாதிடுவோம்,” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *