நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரும், தத்துவ அறிஞருமான அமர்த்தியா சென் விமர்சனம்

இந்தியா 2014 முதல் தவறான திசையை நோக்கி வேகமாக பயணிக்கிறது

Read Time:3 Minute, 50 Second

“விஷயங்கள் மிகவும் மோசமான நிலைக்கு போகிவிட்டது. 2014-ம் ஆண்டுக்கு பின்னர் ஒரு தவறான திசையை நோக்கி வேகமாக பயணிக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் நாம் பின்னோக்கி செல்கிறோம்.” என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரும், தத்துவ அறிஞருமான அமர்த்தியா சென் விமர்சனம் செய்துள்ளார். அமர்த்தியா சென்னின் ‘An Uncertain Glory: India and its Contradiction’ புத்தகத்தின் இந்தி பதிப்பை வெளியிடும் விழாவில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அமர்த்தியா சென் பேசுகையில், பொருளாதாரம் கீழ்நோக்கி செல்கிறது. இந்தியப் பொருளாதாரம் துணைக் கண்டத்தில் இரண்டாவது மோசமானதாகிறது. இப்பகுதியில் உள்ள ஆறு நாடுகளில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடம் பிடித்தது. இப்போது இரண்டாவது மோசமான நாடாகியுள்ளது. மோசமான பொருளாதாரம் என்பதில் இந்தியா முதலிடம் பிடிப்பதில் இருந்து பாகிஸ்தான் காப்பாற்றி வருகிறது.
சமத்துவமின்மை மற்றும் சாதிய முறையிலான சிக்கல்களில் இருந்து அரசு ஒதுங்கியுள்ளது. கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், தங்களுக்கான பாதுகாப்பை கோருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான தேவையானது புறக்கணிக்கப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் நிலையத்தில் வேலைபார்த்த தலித் இளைஞர் சம்பள உயர்வு கேட்டதற்காக தாக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கான அடுத்த முறைக்கான உணவு, உடல்நலம் அல்லது கல்வி பற்றிய எந்தஒரு உறுதியுமில்லாது செல்கிறது.

சுதந்தர போராட்டத்தின் போது இந்து என்ற அடையாளத்தை கொண்டு ஒரு அரசியல் போரை வென்றெடுக்க முடியும் என்பதை பார்ப்பது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது நிலையானது மாறிவிட்டது. இப்போது அவை நடக்கிறது. இதனால் இப்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது என்பது மிக்கியமானது. இது மோடிக்கு எதிரான அல்லது ராகுலுக்கு எதிரான மோதல் கிடையாது, இந்தியாவில் உள்ள பிரச்சனைகளுக்கானது என்று குறிப்பிட்டார்.

மத்திய பா.ஜனதா அரசு பட்ஜெட்டில் சுகாதாரத்துக்காக மிகப்பெரிய காப்பீடு திட்டத்தை அறிவித்தது. அதன் பெயர் ஆயுஷ்மன் பாரத் யோசனா. பிரதமர் மோடியின் ஆயுஷ்மன் பாரத் யோசனா திட்டம் தொடர்பாக வளர்ச்சி பொருளாதார மற்றும் ஆர்வலர் ஜீன் டிரீஸ் பேசுகையில் “ஏமாற்று வேலை” என குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அடிப்படை வகுத்தவரான ஜீன் டிரீஸ், இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 2000 கோடி. அது செலவழிக்கப்பட்டாலும் கூட, ஒரு நபருக்கு 20 ரூபாய்க்கு குறைவாக இருக்கிறது.

இது 50 கோடி மக்களுக்கு சுகாதார காப்பீடு என கணிக்கப்பட்டுள்ளது, ஆனால் கிட்டத்தட்ட அதில் ஒன்றும் கிடையாது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *