காட்டை விழுங்கிய ஜக்கி… தமிழக வனத்துறை மீது சிஏஜி காட்டம்

Read Time:8 Minute, 13 Second

காடுகளை ஆக்கிரமித்து ஈசா கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வனத்துறை, மத்திய-மாநில அரசுக்கள் உடந்தையாக இருந்தது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோயம்புத்தூரில் ஈஷா அறக்கட்டளை அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை கட்டியது தொடர்பான இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையின் (சிஏஜி) கண்காணிப்பு தமிழக வனத்துறைக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

“2005-2008-ல் மலையிட காப்புக் ஆணையத்திடம் (எச்ஏசிஏ) இருந்து அனுமதிப்பெறாமல் ஈசா அறக்கட்டளை, யானைகளின் வழித்தடப்பகுதியான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கட்டுமானங்களை கட்டியுள்ளது,” என்று சிஏஜி குற்றம்சாட்டியுள்ளது.
“கோயம்புத்தூரிலிருந்து மாவட்ட அதிகாரிகள் அப்பகுதியில் மதிப்பீடு செய்தாலும், பிப்ரவரி 2012-ல் விதிமீறல்கள் நடந்துள்ளது. இருப்பினும் வனத்துறை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதை தடுக்கவில்லை,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் மீறல் என்ன?

திங்கள் கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையின்படி, கிராம பஞ்சாயத்து அனுமதியைப் பெற்று ஈசா அறக்கட்டளை  பூலுவாப்பட்டி கிராமத்தில் 32,856 சதுர அடி பரப்பளவில் கட்டிடங்களை கட்டி இருக்கிறது. 1994 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் இந்த கட்டுமானங்கள் நடந்துள்ளது.

மலையிட காப்புக் ஆணையத்திடம் இருந்து ஆட்சேபம் இல்லா சான்றிதழ் பெறாமல் (No Objection Certificate) இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் ரீதியாக ஏற்கத்தக்கது என்பதை உறுதி செய்வது எச்ஏசிஏயின் பணியாகும். அரசின் 2003-ம் ஆண்டைய உத்தரவின்படி, கிராமத்தில் கமர்ஷியல் மற்றும் அலுவலக கட்டடங்களை கட்ட எச்ஏசிஏயின் அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். 2011 அக்டோபரில் ஆட்சேபம் இல்லா சான்றிதழ் வழங்கக்கோரி அறக்கட்டளையின் சார்பில் வனத்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் 2012-ம் ஆண்டு வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்ட போது, எச்ஏசிஏயிடம் ஆலோசிக்காமல் பஞ்சாயத்து வழங்கிய அனுமதியின்படி 2005-2008ல் 11,873 சமீ பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

யானைகள் வழித்தடப் பகுதி  

களஆய்வு அறிக்கையில் பூலுவாப்பட்டியில் யானைகள் வழித்தடங்களாக அறியப்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அறக்கட்டளை கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது விதிமுறைகளை மீறுவது என்று 2012 பிப்ரவரி மற்றும் ஏப்ரலில் வனத்துறை நோட்டீஸ் விடுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஆட்சேபம் இல்லா சான்றிதழ் பெற ஈசா அறக்கட்டளை விடுத்த கோரிக்கையை வனத்துறை 2013 பிப்ரவரியில் திருப்பி அனுப்பியது. ஆனால் அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தொடர்ச்சியான நடவடிக்கையை வனத்துறை எடுக்கவில்லை என்று சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஈசா பல்வேறு விதிமுறைகளை மீறியது வெளிப்படையாகவே தெரிந்தாலும், 2017 பிப்ரவரி பிரதமர் மோடி அங்கு சென்று 113 அடி உயர சிவன் சிலையை திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஒரு மாதங்கள் கழித்து ஈசா, மீண்டும் தாசில்தார் மற்றும் வருவாய்துறையிடம் ஆட்சேபம் இல்லா சான்றிதழ் பெற்றுவிட்டோம் என்ற வனத்துறையை நாடியுள்ளது அரசியல் ஆதரவு பெற்று. எச்ஏசிஏவிற்கு செல்ல ஆட்சேபம் இல்லா சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. கோயமுத்தூர் வனத்துறை அதிகாரி இதனை எச்ஏசிஏ அனுமதி பரிந்துரையுடன் வனத்துறை முதன்மை தலைமை ஆலோசகரருக்கு (பிசிசிஎப்) அனுப்பியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடஙகள் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ளது, மத வழிப்பாட்டுக்காக மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்று காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது என்பது தெரிந்தும் அனுமதியளிக்கப்பட்டது ஏன், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ளது. எச்ஏசிஏ அனுமதி 2017 ஜூலையில் இருந்து வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக தி நியூஸ் மினிட் செய்தி இணையதளம்
பிசிசிஎப் மூத்த அதிகாரி பிசி தியாகியிடம் பேசியுள்ளது. அவர் பேசுகையில், “விதிமுறைகள் மீறல் வெளிப்படையாக இருந்தாலும் நான் தான் அறிக்கையை எச்ஏசிஏவிற்கு அனுப்பினேன். எச்ஏசி கமிட்டி முன்னதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வீட்டுவசதித்துறை செயலாளர் இவ்விவகாரத்தை பார்த்தார். எனக்கு தெரிந்தவரை இவ்விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,”

ஈசா அறக்கட்டளை, தேவையான விதிமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம் என கூறியுள்ளது. எச்ஏசிஏவிடம் இருந்து ஆட்சேபம் இல்லா சான்றிதழ் பெறப்பட்டதா? என்பதற்கு பதிலளிக்கவில்லை.

2012-ம் ஆண்டு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டப்போது வனத்துறை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்று சிஏஜி கண்டனம் தெரிவித்துள்ளது.
காடுகளை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வனத்துறை, மத்திய-மாநில அரசுக்கள் உடந்தையாக இருந்தது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுற்றுசூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் கூறுகையில், “கட்டிடங்கள் கட்டப்பட்ட பின்னர் அப்பகுதியில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்குமான மோதல் அதிகரித்துள்ளது, இப்பகுதியில் நேரிடும் அனைத்து மனித உயிரிழப்பிற்கும்  அவ்வமைப்புதான் காரணம்,” என குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசுக்கு மனசாட்சி இருந்து இருந்தால், அவர்கள் உடனடியாக கட்டிடங்களை இடித்து இருப்பார்கள், இயல்பு நிலைக்கு திரும்ப செய்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை ஆர்வலர் மேக் மோகன் பேசுகையில், எந்தஒரு நடவடிக்கையிலும் இருந்தும் ஜக்கி வாசுதேவை அரசியல் ஆதரவு காப்பாற்றுகிறது. விதிமுறைகள் மீறப்பட்டது எல்லாம் அரசுக்கு தெரியும், இப்போது சிஏஜி அறிக்கையானது அதனை குறிப்பிட்டு காட்டுகிறது, இவ்விவகாரத்தில் வனத்துறை பதிலளிக்க வேண்டிய கேள்விகளை எழுப்பியுள்ளது,” என்று கூறியுள்ளார். இப்பகுதியில் ஈசா கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பின்னர் யானைகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் அதிகரித்து காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *