காமராஜரின் மொன்மொழிகள்!

Read Time:2 Minute, 48 Second

பொதுவாழ்வே தன் வாழ்வாக வாழ்ந்த வேட்கை என்று நற்குணங்களின் பெட்டகமாக மட்டுமே வாழ்ந்த கர்மவீரர் காமராஜருக்கு நிகர் அவரே தான். பெருந்தலைவர் காமராஜர் மிகச்சிறந்த சிந்தனையாளர். அவரது சிந்தனையில் உதிர்ந்த விலை மதிப்பற்ற மொன்மொழிகள் இவை.

 • பணத்துக்குரிய மரியாதை குறைந்து உழைப்புக்கு மரியாதை உயர வேண்டும்.
 • பணம் இருப்பவனுக்கு ஒரு நீதியும், இல்லாதவனுக்கு ஒரு நீதியும் இருப்பது தவறு ஆகும்.
 • நாட்டின் செல்வம் யாரோ ஒரு சில கொழுத்த பணக்காரர்களின் கையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
 • இந்தியாவுக்கு வெளியே இருக்கிற துரோகிகளை காட்டிலும், உள்நாட்டிலேயே இருக்கிற விரோதிகளால் ஆபத்து அதிகம்.
 • அதிகாரிகள் விதிகளை மீறியும் கூட பணக்காரர்களுக்கு சலுகை அளிக்க தயங்குவதில்லை. ஆனால், ஏழைகளை அலட்சியமாக நடத்தும் போக்கு அவர்களிடம் காணப்படுகிறது. அந்த நிலை மாற வேண்டும்.
 • சமத்துவ கொள்கை ஒன்றுதான் இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதற்கு ஏற்ற லட்சியம்.
 • பெருகும் தேசிய வருமானத்தை சரிசமமாக பங்கிடுவது அவசியம். அதுதான் சமூக நீதி.
 • ரத்த அணு பரிசோதனைகளில் இருந்து எந்த ஒரு வகுப்பினரையோ, இனத்தினரையோ, மற்ற இனத்தினரை விட உயர்ந்தவர் என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.
 • நாட்டில் ஒவ்வொருவருக்கும் உணவு , உடை, வீடு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய சக்திகள் தவறாமல் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்படியாக புதியதொரு சமுதாய அமைப்பை ஏற்படுத்தியே தீர வேண்டும்.
 • எந்த தொழிலும் லாபகரமாக நடந்தால்தான் ஊழியர்களுக்கு நன்மை. அத்துடன் நிர்வாகமும் நன்றாக இருக்கும். ஆகவே தொழிலை மேலும் மேலும் வளர்க்க வேண்டிய பொறுப்பு நம்முடையது என்ற மனப்பான்மை.
 • எவன் தலையில் என்ன எழுதினான்? தலைவிதி என்று எவனும் எழுதவில்லை. விதியின் செயல் என்று எதையும் விட்டு விடக்கூடாது.
 • 8-ம் வகுப்பு வரை பெண்களே ஆசிரியர்களாக இருப்பது நல்லது. முடிந்தால் பத்தாவது வகுப்பு வரை அவர்களையே ஆசிரியர்களாக வைக்கலாம். பெண்கள் பொறுமைசாலிகள். எல்லோரையும் அனுசரித்து அன்பாக நடத்தும் பண்புடையவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *