ஜான்ஸன் & ஜான்ஸன் பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Read Time:3 Minute, 51 Second

“ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் முகப் பவுடரைப் பயன்படுத்தியதால், புற்று நோய் வந்துள்ளதாகக் கூறி” பெண்கள் தாக்கல் செய்த வழக்கில் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குழந்தைகளுக்கான பவுடர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. 

 இப்போது, நிறுவனத்தின் முகப் பவுடரைப் பயன்படுத்தியதால், தங்களுக்கு கருப்பை புற்று நோய் வந்துள்ளதாகக் கூறி, வழக்கு தொடர்ந்திருந்த 22 பெண்களுக்கு 470 கோடி டாலர் (சுமார் ரூ.32,200 கோடி) இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்

அமெரிக்காவில் இந்த நிறுவனம் விற்பனை செய்த முகப் பவுடர்களைப் பயன்படுத்தியதால், தங்களுக்கு கருப்பை புற்று நோய் வந்ததாக ஏராளமான பெண்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழங்கு தொடர்ந்துள்ளனர். இதுபோன்று செயின் லூயிஸ் நகரில் 22 பெண்கள் இழப்பீடு வழங்க ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர்ந்தனர்.

ஜான்ஸன் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற பொருள் கலக்கப்படுவதாகவும், இதனால் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளாகவும் கூறப்படுகிறது. 

ஆறுவார காலங்கள் நடைபெற்ற விசாரணையின்போது பெண்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தசாப்தங்களாக பேபி பவுடர்கள் மற்றும் நிறுவனத்தின் பிற பொருட்களை பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறினார்கள். இவ்வழக்கில் 22 பெண்கள் பிரதிநிதிகள் ஆவார்கள், 6 பேர் கருப்பை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார்கள். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜான்ஸன் பவுடர்களில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற பொருள் 1970-களில் இருந்து பயன்படுத்தப்படுகிறது என்று நிறுவனத்திற்கு தெரியும், ஆனால் இதுதொடர்பாக நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வாதிட்டார்கள். 
 இதுகுறித்து இதுதொடர்பான விரிவான விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் 470 கோடி டாலர் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது.  

ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளில், இத்தகைய தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
 
நிறுவனத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எங்களது தயாரிப்புகளில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதால் புற்று நோய் உண்டாகாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். நியாமற்ற நீதி விசாரணை காரணமாகவே இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு எதிரான தீர்ப்பை பெறுவதற்காக, மிஸரி மாகாணத்தில் வசிக்காதவர்கள் கூட, அந்த மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

One thought on “ஜான்ஸன் & ஜான்ஸன் பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *