பிரதமர் மோடியின் பாதிக்கப்பட்ட மனநிலையை காட்டுகிறது 

Read Time:7 Minute, 15 Second

முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறதா? என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், அவருடைய பாதிக்கப்பட்ட மனநிலையை காட்டுகிறது என விமர்சனம் செய்துள்ளது.

பூர்வாஞ்சல் அதிவிரைவு சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அசாம்கரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.23,000 கோடி மதிப்பில் 340 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படும் பூர்வாஞ்சல் அதிவிரைவு சாலை திட்டத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,  முஸ்லிம் நாடுகளில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவிலும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். முத்தலாக் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அணுகும் முறையில் இருந்தே, அக்கட்சிகளின் உண்மையான முகத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருபக்கத்தில் மத்திய அரசு, பெண்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், எளிமையாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மறுபக்கத்தில், பெண்களின் வாழ்க்கையை ஆபத்தில் வைத்திருக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில், இயற்கை வளங்கள் மீது முஸ்லிம்களுக்குதான் முதல் உரிமை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். ஆதலால், ராகுல் காந்தியின் கருத்து எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்கள் கட்சி என்ன, முஸ்லிம் ஆடவர்களுக்கான கட்சியா? முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியம் மற்றும் உரிமைகள் அளிக்கப்படுகிறதா? முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற விடாமல், எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன என குற்றம் சாட்டினார்.

உருது மொழி பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளியாகியிருந்த செய்தியில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கான கட்சி என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தியை காங்கிரஸ் மறுத்தது. இதுகுறித்து அக்கட்சி அளித்த விளக்கத்தில், நாட்டு மக்கள் 132 கோடி பேருக்கும் பொதுவான கட்சிதான் காங்கிரஸ் எனத் தெரிவித்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து, காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவுக்கு இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

மோடி விஷத்தை பரப்புகிறார்

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பேசுகையில், அடுத்துவரும் தேர்தல்களில் தோல்வி உறுதி என்பதால் பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார். இதனால் வெறுப்பு, பிரிவினை எனும் விஷத்தை பிரதமர் மோடி பரப்பி வருகிறார். ராகுல் காந்தியை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் மோடி செயல்படுகிறார், என்று குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்ட மனநிலை

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா பேசுகையில், பிரதமர் மோடி, அவருடைய அலுவலகத்திற்கான கண்ணியத்தை தொடர்ந்து சிதைத்து வருகிறார். அவருடைய பேச்சுக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம். அவருடைய பேச்சு அவருடைய பாதிக்கப்பட்ட மற்றும் திரிக்கும் மனநிலையை காட்டுகிறது. “சமுதாயத்தை பிளவுபடுத்த ஒரு முயற்சியை மேற்கொள்கிறார்.”  அவரது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசிய இயக்கத்தை வழிநடத்தியது, சுதந்திரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தது.
அதனை ஒரு முஸ்லீம் கட்சியென்று அழைப்பது பிரதமரின் சரியான நடத்தை கிடையாது. அவரது பாதிக்கப்பட்ட மனநிலையானது தேசிய கவலையின் ஒரு பிரச்சனையாக உள்ளது. வரலாறு மற்றும் உண்மையின் அடிப்படையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் அனைத்து தவறானவை. பிரதமர் மோடி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பிரதமர் ஆவார், பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டும் கிடையாது. அவருக்கு வரலாறு பற்றி எதுவும் தெரியவில்லை, எனவேதான் தனக்கென்று ஒரு வரலாற்றை எழுதியுள்ளார். பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களின் பட்டியலை தன்னுடைய அலுவலகத்தில் வைத்துக் கொள்வது சரியாக இருக்கும்.

தவறான தகவல்களை வெளியிட மாட்டார். காங்கிரஸ் இந்தியர்களுக்கானது, நாட்டின் பன்முகத்தன்மையை மதிக்கிறது.

காங்கிரஸ் கட்சி முத்தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தது, பாராளுமன்றத்தில் சில வழிமுறைகள் மற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது பிரதமருக்கு தெரிய வேண்டும். ஆனால் பா.ஜனதா அரசு பாராளுமன்றத்தை தாண்டி செயல்பட முயற்சி செய்தது. அவர்கள் பாராளுமன்றத்தின் கண்காணிப்பின்றி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். பிரதமர் மோடி கடந்த 4 வருடங்களாக என்ன செய்தார் என்பதை கூறாமல், பொய்களையும், பாதி உண்மைகளையும், பொய்களையும் பரப்பி வருகிறார்,” என குற்றம் சாட்டினார். மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் மாநிலங்களவையில் முடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *