சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘என்.ஜி.கே.’ செகண்ட் லுக் வெளியானது

Read Time:1 Minute, 39 Second

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘என்.ஜி.கே’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படம் ‘என்.ஜி.கே’. படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை சூர்யாவுக்குப் பிறந்த நாளாகும். அதை முன்னிட்டு செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ‘என்.ஜி.கே’ தலைப்பிற்கான விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவின் பெயர் ‘நந்த கோபாலன் குமரன்’ அதன் சுருக்கமே என்.ஜி.கே என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால், அங்கு ‘நந்த கோபாலன் கிருஷ்ணன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இருப்பினும் போஸ்டரில் தீபாவளி வெளியீடு தொடர்பான தகவல் இடம்பெறாதது சூர்யா ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.