பெற்றோர்களே உஷார்! “ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு குழந்தைகளின் நினைவாற்றலை பாதிக்கலாம்”

Read Time:9 Minute, 20 Second

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்தி வரும் இளம் பருவத்தினருக்கு அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மோசமான பாதிப்புக்களை உருவாக்கும் எனவும், மூளை மண்டலங்களில் நினைவாற்றல் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வயர்லெஸ் தகவல்தொடர்பு சாதனங்களில் இருந்து வெளியாகும் அதிர்வெண் மின்காந்த புலங்கள்(RF-EMF) கதிர்வீச்சினால் இளம் வயதினரின் நினைவாற்றல் செயல்பாடு இடையிலான தொடர்பை சுவீஸ் நாட்டின் சுகாதாரத் துறை (ஸ்விஸ் ட்ராபிகல் மற்றும் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட்) விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த ஆய்வில், ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு , இளம் பருவத்தினரின் ஒட்டுமொத்த மூளை செயல்திறன் வளர்ச்சிக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்தில் உள்ள கிட்டத்தட்ட 700 இளம் பருவத்தினர் பங்குபெற்றனர். “உட்புற நினைவகம் முக்கியமாக வலது மூளை அரைக்கோளத்தில் அமைந்துள்ளது, பெரும்பாலும் ஸ்மார்ட்போனை வலதுபுறம் வைத்து பேசும் இளம் பருவத்தினருக்குதான் அதிகமான கதிர்வீச்சு தொடர்பு ஏற்படுகிறது. அவ்வாறு பேசும் போது வலது பக்கத்தில் மூளையில் பாதிப்பை ஏற்படுத்த அதிகமான வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் இடதுபுறத்தில் வைத்து பேச முயற்சிப்பது நல்லது.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களின் விரைவான பரிணாம வளர்ச்சியுடன் (ICT) நம்முடைய அன்றாட வாழ்வில் கதிர்வீச்சு அதிர்வெண் மின்காந்த புலங்களின் (RF-EMF) வெளிப்பாடும் அதிகரிக்கிறது. செய்கிறது. மொபைல் போன்களை தலைக்கு மிகவும் அருகாமையில் வைத்து பேசுவது கதிர்வீச்சு, மூளைக்கான நேரடியான தொடர்பை கொள்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மொபைல் போனின் மற்ற அம்சங்களான, குறுஞ்செய்திகளை செய்திகளை அனுப்புவது, கேம் விளையாடுவது மற்றும் இணையதளம் பயன்படுத்தல் ஆகியவையால் மூளைக்கு குறைந்த அளவே கதிர்வீச்சு தொடர்பை ஏற்படுத்துகிறது, இதற்கும் நினைவாற்றல் பாதிப்புக்கும் தொடர்து அதிகம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

RF-EMF கதிர்வீச்சு சாத்தியமான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் காண பல ஆய்வுகள் நடத்தப்பட்டன, ஆயினும் முடிவுகள் முடிவுக்குவராமலே செல்கிறது.

மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இந்த ஆய்வில் இடம்பெற்று இருந்த விஞ்ஞானி மார்டின் ரூஸ்லி பேசுகையில், இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் குறிப்பிடத்தக்க அம்சம் மொபைல்போன் பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து நேரடியாக சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆகும் என்று குறிப்பிடுகிறார். இருப்பினும், RF-EMF கதிர்வீச்சு எப்படி மூளைக்கான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பாக ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது உள்ளது, பிற காரணிகள் தொடர்பாகவும் ஆய்வை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது.
RF-EMF கதிர்வீச்சு மூளை செயல்முறைகளை எவ்வாறு பாதிக்கலாம், இது தொடர்பான நீண்டகால ஆய்வின் முடிவுகள் எப்படி இருகுக்ம் என்பதை இன்னும் தெளிவாக தெரியவில்லை என குறிப்பிடுகிறார் ரூஸ்லி.

மொபைல் போன்களை பயன்படுத்தும் போது ஹெட்போன்களை வைத்து கேட்பது அல்லது அதிக சத்தத்தில் (loud speaker) வைத்து கேட்பது மூளைக்கான பாதிப்பை குறைக்கும். சிக்னல் குறைவாக இருக்கும் சமயங்களில் மொபைல் பயன்படுத்துவது பாதிப்பை அதிகரிக்க வல்லது எனவும் எச்சரிக்கிறார் ரூஸ்லி. மேலும், போனில் ரிங் போகும் போதும் போனை காதிலேயே வைத்திருக்க கூடாது. ஸ்பீக்கர் மோடில் அல்லது சற்றுத் தொலைவில் வைத்திருந்து எதிர்முனையில் எடுக்கப்பட்டவுடன் காதில் வைக்க வேண்டும். ஒரு மொபைல் போனிலிருந்து இன்னொரு ஃபோனுக்கு ரிங் போகும் போது கதிர்வீச்சு 14 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மொபைல் போன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாகுவதாக ஆய்வாளர்கள் முந்தைய ஆராய்ச்சியில் விளக்கியிருந்தனர். Gliomas, Acoustic neuormaspe ஆகிய புற்றுநோய் கட்டிகள் உருவாகலாம். 24 மணி நேரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் போன் பயன்படுத்தினால் பலவிதமான நோய்கள் வர காரணமாகிவிடும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. மொபைல் போனைப் பிடித்திருக்கும் போதும் கவனமாக இருக்க வேணடியது அவசியமாகும்.

மொபைல் போன்களின் முனைகளைப் பிடித்து பேசுதல் சிறந்தது, பின் பக்கத்தை மூடிக் கொண்டு பேசக் கூடாது. மொபைல் போன்களின் இண்டர்னல் ஆண்டெனா பின்பகுதியில் தான் இருக்கும். மொபைல் ஃபோனில் வைப்ரேஷன் மோடில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். உறங்கும் போது போனை தலையணைக்கு அடியிலோ;அல்லது அருகிலேயே வைத்து படுக்கக் கூடாது. குழந்தைகள் இளம் வயதிலேயே பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, மொபைல் போன்களை அவர்களிடம் கொடுப்பதை தவிர்த்துவிடுவது நல்லது.
‘கேன்சர்’ அபாயம்

சமீபத்தில் மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கிரிஷ் குமார் பேசுகையில், ஸ்மார்ட்போனை அதிகநேரம் பயன்படுத்துவதால், கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். நாள் ஒன்றுக்கு அரை மணி நேரத்துக்கும் மேல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே அதிகமாகும். அலைபேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால், ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதால், அவர்களின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள், கதிர்வீச்சு ஆழமாக ஊடுருவுகிறது. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கிறது. இளைஞர்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் ‘மூளை கேன்சர்’ ஏற்படும் அபாயம் 400 சதவீதம் அதிகமாக உள்ளது. மொபைல் போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதனின் மரபணுவில் மாற்றமுடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது. மொபைல் போன்களை தலையின் அருகில் வைத்து அதிகநேரம் பயன்படுத்துவதால், துாக்கமின்மை, நரம்பு கோளாறு, ஞாபக மறதி, நடுக்குவாதம் (பார்கின்சன்) போன்ற நோய்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நவீன தொழில்நுட்பங்கள், மக்களுக்கு பல வழிகளிலும் நன்மை அளிக்கிறது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்பைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

விழிப்புணர்வு காரணமாக நாம் ஓரளவு செல்போன் பற்றிய நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்போம். ஆனால் குழந்தைகள் அப்படி கிடையாது. அவர்கள் இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.