இந்தி செல்கிறார் அமலாபால்

Read Time:1 Minute, 55 Second

அமலாபால் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழில் ‘மைனா’ படம் மூலம் பிரபலமான அமலாபால், சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். திருட்டுப்பயலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் வெளியான நிலையில் அவர் இந்தி சினிமாவிற்கு செல்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இப்போது இந்தி சினிமாவிற்கு செல்வதை அவரே தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நரேஷ் மல்கோத்ரா சமீபத்தில் அமலாபாலை அணுகி இந்தி படத்தில் நடிக்க கதை சொன்னார். அது அவருக்கு பிடித்ததால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார்.

இதில் கதாநாயகனாக அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார். இதுகுறித்து அமலாபால் பேசுகையில், “இந்தியில் இருந்து கடந்த சில வருடங்களாகவே எனக்கு அழைப்புகள் வந்தது. நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தேன். இயக்குனர் நரேஷ் தமிழ் படங்களில் எனது நடிப்பை பார்த்து அவரது கதைக்கு பொருத்தமாக இருப்பதாக என்னை அணுகினார். கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்ததால் ஒப்புக்கொண்டேன். இந்த படம் இந்தியில் எனக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.

இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு 100 சதவிதம் பொருந்தியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது அமலாபால் ராட்சசன் என்ற படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.