தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனரக உலோகங்களால் நிலத்தடிநீர் மாசு

Read Time:3 Minute, 53 Second

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனரக உலோகங்களால் நிலத்தடிநீர் மாசுப்பட்டுள்ளது என்று மத்திய நிலத்தடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இம்மாவட்டங்களில் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஎஸ்ஐ) அனுதிக்கப்பட்ட அளவைவிட நிலத்தடிநீரில் காட்மியம் மற்றும் குரோமியம் போன்ற உலோகங்கள் அதிகமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மத்திய நிலத்தடிநீர் வாரியம் பிராந்திய அளவில் நிலத்தடிநீரின் தரத்தை ஆண்டுக்கு ஒருமுறை கண்காணிகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நிலத்தடிநீரில் லிட்டர் ஒன்றுக்கு 0.01 மி.கிராம் மாசு காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 0.05 மி. கிராமிற்கு அதிகமான குரோமியம் உள்ளது. கடலூர், ஈரோடு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் குரோமியத்தால் நிலத்தடிநீர் மாசுப்பட்டுள்ளது.

காட்மியம் உலோகக் கலவைகள், தடுப்பு வண்ணப்பூச்சுகள், சாயங்கள் மற்றும் பதனிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. குரோமியம் மாசுபாடு பொதுவாக மோசமான சேமிப்பு, கசிவு அல்லது தவறான அகற்றும் முறையால் ஏற்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை காட்மியம் மூலம் மாசுபடுத்துகிறது என்று ஆய்வு கூறுகிறது. சென்னையின் அருகே உள்ள இரண்டு அண்டை மாவட்டங்களில் நிலத்தடிநீர் மாசுப்பட்டுள்ளது. அங்கு லெட், காட்மியம் மற்றும் குரோமியம் போன்றவற்றால் மாசுப்பட்டுள்ளது. இது, குடிக்க முடியாதவை. நிலத்தடிநீரை கனரக உலோகங்கள் மாசுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் பேசுகையில், நாங்கள் இதனை கண்காணிப்பது கிடையாது, எங்களிடம் அதற்கான உபகரணங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள் என தி நியூ இந்தியன் எஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கனரக உலோகங்களால் மாசு

லெட் (lead): திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சீபுரம்
காட்மியம்: திருவள்ளூர்
குரோமியம்: கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், திருவள்ளூர்.

“எங்களிடம் 1995-ல் அதற்கான உபகரணங்கள் இருந்தது, அவை பழையதாகிவிட்டது. நாங்கள் இப்போது புதிய உபகரணங்களை வாங்குகிறோம், இரண்டு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்,” என்று மாநில அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது.

கனரக உலோக மாசுபாடு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் நிலத்தடிநீரில் பிஎஸ்ஐ அனுமதிக்கப்பட அளவைவிடவும் அதிகமான உப்புத்தன்மையும் உள்ளது. 19 மாவட்டங்களில் ஃப்ளோரைடு ஒரு லிட்டர் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளது. ஆர்சனிக் மாசுபாடு 9 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது, ஒருலிட்டரில் 0.01 மி.கி. இருந்துள்ளது. 29 மாவட்டங்களில் நைட்ரஜன் மாசும் பதிவாகியுள்ளது. இந்தியா இதுவரை இல்லாத அளவு மிக மோசமான தண்ணீர் பிரச்சினையை சந்தித்து கொண்டிருப்பதாகவும், இதனால், 2030-ம் ஆண்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.