புற்றுநோய் செல்களை அழிக்கும் மஞ்சள்!

Read Time:6 Minute, 0 Second

இந்திய உணவு வகைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மஞ்சளை புற்றுநோய் செல்களை அழிக்க பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவில் பண்டைக் காலம் முதலே உணவுப்பொருட்கள், ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை வரமாக கொடுத்த மிகச் சிறந்த கிருமி நாசினியான மஞ்சளை இன்று உணவில் நிறத்திற்காக சேர்க்கும் நிலைதான் உள்ளது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் காயம் நேரிட்டால் உடனடியாக பயன்படுத்தும் பொருளாக மஞ்சள் இருந்து வந்தது. பக்க விளைவு இல்லாத இந்த இயற்கை மருந்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது.

அதுவே அழகுசாதனம், பற்பசை பொருட்களில் மஞ்சள் இருக்கிறது என கூறி கார்பரேட் நிறுவனங்கள் விற்பனை செய்யும் போது மக்களின் மனஓட்டம் மாறுகிறது. விளம்பரங்கள் மீது நம்பிக்கை வைக்கும் மக்கள் ‘உணவே மருந்து’ என இயற்கை அளித்த பொருட்களை இயற்கையாகவே பயன்படுத்துதல் சிறந்தது.

மரணமே வாசலாகவுள்ள ஆட்கொல்லி நோயாக பொதுமக்களை அச்சுறுத்திவரும் புற்றுநோய்க்கான மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். ஆராய்ச்சியாளர்களின் கவனம் மஞ்சள் பக்கம் திரும்பியுள்ளது. இயற்கையாகவே மஞ்சளில் இருக்கும் கர்கியுமினுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் திறனுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

புற்றுநோய் வளர்வதையும், அது பரவுவதையும் கர்கியுமின் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மஞ்சளின் மூலப்பொருளான கர்கியுமினுக்கு நோய் எதிர்ப்பு, அழற்சி தடுப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, ஆண்டிமியூடாஜெனிக் ஆகிய பண்புகள் உள்ளன. கர்கியுமின் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் வளர்ச்சி தடுக்கப்படுகிறது என்பது ஏற்கனவே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்போது இதுதொடர்பான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் திபான்ஜன் பான் கூறுகையில், “புற்றுநோய் செல்களை அழிக்க மஞ்சளில் உள்ள கர்கியுமின் சிறந்த மருந்தாக இருக்கிறது. இருப்பினும், அதனுடைய கரையும் தன்மை மோசமாக உள்ளதால் முழுமையாக பயன்படாது,” என்கிறார். அவருடன் பணியாற்றும் ஆராய்ச்சி மாணவர் சந்தோஷ் மிஷ்ரா பேசுகையில், “ஒரு மருந்தை வெளியிடுவதற்கு முன்னதாக அது தண்ணீரில் கரையவேண்டியது அவசியமானது. மறுபுறம் அது இரத்த ஓட்டத்தின் வழியாக செல்லக்கூடாது,” என்கிறார்.

பிளாட்டின்ஸை (platinum agents) பயன்படுத்தி ஆராய்ச்சியளர்கள் அதிநவீன மெட்டாலொசைக்லி கவலையை உருவாக்கியுள்ளனர் அதனால் கர்கியுமினை கரைய வைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்.

PNAS பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கர்கியுமின் மற்றும் பிளாட்டின்ஸை தனித்தனியாக பயன்படுத்துவதற்கு பதிலாக கலவையாக பயன்படுத்தும் போது மெலனோமா மற்றும் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதில் 100 மடங்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது. புற்றுநோய் செல்களை வளரச்செய்வதிலும், அவற்றை பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றும் STAT3 பாஸ்போரிலேசன்களை தடுக்கும் சக்தி கர்கியுமின்னிடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாட்டிஸ்-கர்கியும் கலவை செல்களின் டிஎன்ஏவை சிதைத்து, அதனை அழித்துவிடுகிறது. கர்கியும்களை வழங்கும் முறையை பரிசோதனை செய்து இருந்தாலும், இறுதியில் மற்ற மருந்துகளோடு இணைந்து செயல்படும் சாத்தியக்கூறுகளை கொண்டே புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் அதனுடைய பங்களிப்பு இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். “புற்றுநோய் சிகிச்சையில் பல மருந்துகளை பயன்படுத்துவதில் ஏற்படும் கட்டுப்பாடு அவற்றின் குறைவான கரைதிறன் ஆகும்” என்று பான் கூறினார்.

“மருந்து நீரில் கரையக்கூடியதாக இருக்கும்போது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மருந்தை எடுத்துக்கொள்வது எப்படி இருந்தாலும், உடலில் உள்ள உறுப்புகளால் அது இறுதியில் உறிஞ்சப்பட்டுக் கொள்ள வேண்டும், “என்றும் அவர் குறிப்பிடுகிறார். இப்போதைய வழிமுறை புற்றுநோய் செல்களை அழிக்கவும், புற்றுநோயின் வேர் சிஸ்டத்தை அழிக்கவும், மீண்டும் ஏற்படாமல் இருக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்க நம்பிக்கையிருப்பதாக பான் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.