மோடி அரசின் விளம்பர செலவு தொகையால்  46 மில்லியன் குழந்தைகளுக்கு ஒரு வருடம் உணவு வழங்கியிருக்கலாம்!

Read Time:3 Minute, 35 Second

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விளம்பரத்திற்காக செய்த தொகையை கொண்டு, ஒரு வருடத்திற்கு 45.7 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் (MNREGS) கீழ் 200 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம். சுமார் 6 மில்லியன் புதிய கழிவறைகள். இன்னும் குறைந்தது 10 செவ்வாய் கிரக திட்டங்கள் ஆகியவற்றிற்கு தேவையான நிதியை பூர்த்தி செய்திருக்கலாம்.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு விளம்பரத்திற்காக 2014 ஏப்ரல் முதல் 2018 ஜூலை வரையில் 52 மாதங்களில் ரூ. 4,800 கோடியை செலவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. முன்பு இருந்த காங்கிரஸ் அரசு 37 மாதங்களில் செய்த செலவைவிட இரு மடங்கு பா.ஜனதா அரசு  கூடுதலாக செலவு செய்துள்ளது. காங்கிரஸ் தலமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2011 மார்ச் முதல் 2014 மார்ச் வரையில் விளம்பரத்திற்காக செய்த செலவு ரூ. 2,048 கோடியாகும். இத்தகவல் 2014-ம் ஆண்டு ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்தது.

விளம்பரத்திற்காக பா.ஜனதா அரசு செய்த தொகையான ரூ. 4,880 கோடியில் ரூ. 292.17 கோடி (7.81%) மூன்று வருடங்களில் 4 பொது திட்டங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் பயீர் காப்பீடு, தூய்மை பாரதம் திட்டம், சுமார்ட் சிட்டி திட்டம் மற்றும் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கான விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது.  இப்போது அரசு விளம்பரத்திற்காக செய்த தொகை வெளியே தெரியவந்ததும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆர்வலரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷ்ண் டுவிட்டரில் அரசு செலவு செய்தது தொடர்பான செய்தியை பகிர்ந்து, “மோடி அரசு விளம்பத்திற்காக ரூ. 5000 கோடி வரையில் செலவு செய்துள்ளது. அதிகமான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் முகம் மட்டுமே தெரிகிறது. பொதுமக்களின் பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக பள்ளிகள், மருத்துவமனைகளை கட்டியிருக்கலாம். அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு அது மிகப்பெரிய ஆதாயத்தை பெற்று தந்திருக்கும்,” என கூறியுள்ளார்.

மோடி அரசு விளம்பரத்திற்காக செய்த செலவை கொண்டு முக்கியமான திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதை indiaspend பட்டியலிட்டுள்ளது.

  • ஒரு வருடத்திற்கு 45.7 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியிருக்கலாம்.
  • பள்ளி கல்வித்துறையின் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ)  திட்டத்திற்கு இவ்வாண்டு பட்ஜெட்டில் ரூ. 4,213 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, கூடுதலாக ரூ. 667 கோடி வழங்கியிருக்கலாம்.