மூளையின் நினைவாற்றலுக்கான உணவுகள்!

Read Time:4 Minute, 56 Second

உடலை கட்டுக்கோப்பாக வைக்க வைத்துக்கொள்ள வேண்டும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவதத்தை மூளைக்கும் ஏன் கொடுக்கக்கூடாது?

மூளையை புறக்கணிக்கும் போது அதில் பாதிப்பு நேரிடும். அதாவது முதுமை மறதி மற்றும் அல்சீமர் நோய்களுக்கு வழிவகைசெய்யும் (Dementia and Alzheimer’s Disease ). அல்சீமர் நோய் எதனால் வருகிறது என்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை. முதுமையில் வரும் மறதிக்கும், அல்சீமர் மறதி நோய்க்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முதுமையில் மறதி வரும். கொஞ்ச நேரம் கழித்து நினைவுக்கு வந்துவிடும். அல்சீமரிலோ மறந்தது எளிதில் நினைவுக்கு வராது. இருப்பினும், சரியான உணவுகளை சாப்பிடுவது மற்றும் முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நீண்ட காலத்திற்கு மூளையை ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மூளையின் ஆரோக்கியத்திற்கான உணவுகளை பார்க்கலாம்:

நட்ஸ் வகைகள்:

முந்திரி, பாதாம், வால்நட் நட்ஸ் வகைகளில் வைட்டமின் இ, மக்னீசியம், செலினியம், ஃபோலிக் அமிலம், ஃபோலேட், மெலட்டோனின், கோலின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. வால்நட்களில் அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது, இதனால் நினைவாற்றலை மேம்படுத்த முடியும். மன அழுத்தத்தை குறைக்கும் வல்லமை வால்நட்டுக்கு உண்டு. நட்ஸ்கள் மூளையின் வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களின் பாதுகாப்புக்கும் உதவுகின்றன. இளம் பருவத்தினர், தினமும் ஒன்றிரண்டு சாப்பிடலாம்.

தேங்காய்:

தேங்காய் தண்ணீரும், எண்ணெயும் குறுகிய காலத்தில் முதுமை மறதி மற்றும் அல்சீமர் நோயை கையாள்வதில் பயனுள்ளதாக இருக்கும். அழற்சியை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டது.

தயிர்:

தயிர் முழுமையான சூப்பர்ஃபுட் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு தேவையான ஆற்றலை அளிக்கும் அமினோ அமிலம் உள்ளது. அதனால் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

கீரை:

கீரைகளில் சத்துக்கள் செரடோனின் உற்பத்தியை தூண்டி, மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கும். சீரில்லாத ரத்த ஓட்டப் பிரச்னையால் ஏற்படும், மூளை பாதிப்பை சரிசெய்யும். மூளையின் பாதிப்புகளை பெருமளவு குறைக்கும். பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும் ஆற்றல், கீரைக்கு உண்டு. வயதானவர்களுக்கு வரும் மறதி நோய், மன நோய் பிரச்னைகளையும் சரிசெய்யக்கூடியது.

மஞ்சள்:

மஞ்சளில் உள்ள குர்குமின், வயதானவர்களுக்கு ஏற்படும் மறதி நோயை சரியாக்கும். தினமும், சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூளையில் உள்ள வளர்ச்சி ஹார்மோனின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். புதிதாக நியூரான்கள் வளர்வதற்கு உதவும். புத்தி கூர்மைக்கு உதவுகிறது.

அசைவம்:

முட்டை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்களில் கோலின், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. தொடர்ந்து சாப்பிட்டுவர, அறிவாற்றல், நினைவாற்றல் அதிகரிக்கும். ஞாபகமறதி வராமல் தடுக்கும். அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய தோரின் என்ற சத்து இவற்றில் உள்ளது. அதிகமாக சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். வாயுப் பிரச்னை வரலாம்.

பிற வகைகள்:

ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி பழம், தக்காளி, முலாம் பழம், பேரீச்சம்பழம், காரட், அன்னாசி, காலி பிளவர், முட்டை கோஸ், பசலைக் கீரை, கொத்துமல்லி, வல்லாரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, பாதாம் பருப்பு, சோயா பீன்ஸ், சோயா எண்ணெய், பால், தயிர், அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற உணவு வகைகள் புதிய ரத்த செல்கள் உருவாகவும், மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றன. ஞாபகசக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.