நீதிமன்றத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டிய நீதிபதிகள் சுங்க சாவடிகளில் தனி பாதைகள் கேட்கக்கூடாது

Read Time:4 Minute, 33 Second

எல்லோரையும் போல் நீதிபதிகள் மற்றும் விஐபிகள் என அழைக்கப்படும் மற்றவர்களும் சுங்க சாவடிகளில் ஏன் வரிசையில் காத்திருக்கக் கூடாது? ஜனநாயகத்தில் விதிவிலக்கு பெறுவதற்கான பிரிவுகள் கிடையாது.

பணியில் உள்ள நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய விஐபிகளின் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் தடையின்றி செல்லும் வகையில் தனி வழித்தடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும், இதனை அமல்படுத்தும் விதமாக அறிவிப்பை வெளியிடவில்லை எனில் நோட்டீஸ் விடுக்கப்படும் என்பதையும் ஏற்க மறுக்கிறேன். நீதிபதிகள் அடிக்கடி சுங்கச்சாவடிகளில் 10-15 நிமிடங்கள் வரிசைகளில் நிற்கவேண்டும் என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நியாயப்படுகிறது. எல்லோரும் இதனை எதிர்க்கொண்டுதான் ஆகவேண்டும். நீதிபதிகள் மட்டும் ஏன் வேறு விதமாக நடத்தப்பட வேண்டும்?

இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14-18 அனைத்து மக்களும் சமமானவர்கள் என்பதை உறுதி செய்கிறது, விஐபிகள் என அழைக்கப்படுபவர்களுக்கு விதிவிலக்கான அணுகுமுறைக்கு என்று எந்தஒரு பிரிவும் கிடையாது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 2004 முதல் 2005 வரையில் தலைமை நீதிபதியாக பணியாற்றினேன். மதுரையில் உயர்நீதிமன்றத்தில் புதிய கிளை திறக்கப்பட்டது, அப்போது சென்னையிலிருந்து மதுரைக்கு ரெயிலில் பயணம் செய்தேன். மதுரை ரெயில் நிலையம் சென்றதும் அங்கு என்னை வரவேற்பதாக அதிகளவு போலீசார் காத்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை வரையில் 16 கிலோ மீட்டர் தொலைவாகும். நாங்கள் காரில் சென்ற போது ஒவ்வொரு 200-300 மீட்டருக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

மாலை மதுரை பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அழைப்பு விடுத்தேன், பொதுமக்களுக்கு பாதுகாப்புக்குதான் போலீசாரை பயன்படுத்த வேண்டும், விஐபிகளின் ஈகோவை திருப்தி படுத்துவதற்காக பயன்படுத்த கூடாது என்று அவரிடம் கூறினேன். குடிமக்களை காப்பாற்றும் பணியில் இருந்து போலீஸ்காரர்களை திசைத்திருப்பும், மக்களை பாதுகாப்பற்ற இடங்களில் விட்டுச்செல்லும். திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அந்த ஒருநாளை பயன்படுத்தக்கூடும். இதுபோன்று போலீஸ்காரர்களை இனி நிறுத்தக்கூடாது என்று அவரிடம் அறிவுரையை வழங்கினேன்.

டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக வந்தபோது, என்னுடன் பணிபுரிந்தவர்கள் விமான நிலையங்களில் நீதிபதிகளை பரிசோதனை செய்யக்கூடாது என விமான நிலைய அதிகாரிகளிடம் பேசும்படி கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன், எல்லோரும் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என்றேன். ஒவ்வொரு நாளும் அரசியலமைப்பின் 14 வது பிரிவை (சமத்துவத்திற்கான பிரிவு) தீர்ப்புகள் மூலம் செயல்படுத்துகிறோம், இந்த பிரிவுகள் எங்களுக்கு பொருந்தாது என்று கூறி நியாயப்படுத்தலாமா? அமெரிக்காவிற்கு பலமுறை சென்றுள்ளேன், அங்கு சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளுக்கு என்று தனியாக வரிசை கிடையாது.

அதிகமான அமெரிக்க நீதிபதிகளை பார்த்துள்ளேன், அவர்கள் மிகவும் பணிவுடன் நடந்துக்கொண்டார்கள். அவர்கள் சிறப்பு சலுகைகளை கேட்கவில்லை. பிறகு ஏன் நாம் கேட்கிறோம்?

– உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

நன்றி: திபிரிண்ட்