குடியேற்ற நில ஆக்கிரமிப்பாளர்களால் பழனி மலைகள் அழிப்பு !

Read Time:6 Minute, 52 Second

மனிதன் – மிருகங்கள் இடையிலான மோதல்களை தவிர்ப்பதை கடிமானதாக்கும் உள்ளூர்வாசிகளின் மின் வேலி அமைப்பு. பழனி மலைகள் குடியேற்ற நில ஆக்கிரமிப்பாளர்களால் வனவிலங்குகள் மற்றும் வனவாசிகளுக்கு இழப்பு நேரிடுகிறது என்று வனத்துறை முதன்மை தலைமை ஆலோசகர் (பிசிசிஎப்) உயர்நீதிமன்றத்தில் விளக்கத்தை வழங்கியுள்ளார்.

இதில் அதிர்ச்சிகரமான வெளிப்பாடு என்னவென்றால், உள்ளூர்வாசிகள் ஆக்கிரமிப்பு நிலங்களை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் அங்குள்ள அரசியல்வாதிகளின் ஆதரவுகளுடன் வனத்துறையை சூரியமின் சக்தியிலான வேலிகளை நீக்குவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் வனப்பகுதிகளில் யானைகளால் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பான பொதுநல வழக்கில் வனத்துறை உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.

வனத்துறை முதன்மை தலைமை ஆலோசகர் ரவிகாந்த் உபாத்யாய் வழங்கியுள்ள பதிலில், கொடைக்கானல் 1821 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முழுபகுதியும் ஷோலா புல்வெளியை கொண்ட பரந்த காடுகள் நிறைந்த நிலமாகும். பலியான் பழங்குடியினர்தான் பழனி மழையின் பூர்விக குடிமக்களாவார்கள், 1840களுக்கு பிறகு அவர்கள் அங்கு குடியேற ஆரம்பித்தார்கள். 1883 ஆம் ஆண்டில் கொடைக்கானல் மக்களின் எண்ணிக்கை 615 ஆக இருந்தது. ஆனால் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இது ஒரு இனிமையான மலை வளாகமாக வளர தொடங்கியது, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அங்கு 70,018 ஆக உயர்ந்துள்ளது. 

அண்மையில் காலங்களில் அங்கு நில பயன்பாட்டு முறையில் மாற்றம் காரணமாக முழு பழனி நிலப்பரப்பும் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டது

“வர்த்தக சுற்றுலா நடவடிக்கைகள்; ஆப்பிள் விளைச்சல், காப்பி, வாழை, காய்கறி மற்றும் யூகலிப்டஸ் தோட்டங்கள் ஆகியவற்றால் வனவிலங்கு வாழ்விடங்கள் மிகப்பெரிய அளவில் சிதைந்துபோயின. 

 

ஆசிய யானைகளுக்கு ஆண்டுக்கு சுமார் 700-750 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு வனப்பகுதி, நாளொன்றுக்கு 150 முதல் 200 கிலோ வரையில் தீவனம் மற்றும் 150 லிட்டர் தண்ணீர் தேவையானது. யானைகள் உட்பட அனைத்து காட்டு விலங்குகளிலும் இலவசமாக இடம்பெயரும் சூழ்நிலை வனப்பகுதியில் இல்லை. “பலியான் பழங்குடியினர் மற்றும் பிறமக்கள் வன விலங்குகளோடு இணைந்து வாழ்ந்தனர், அவர்கள் சமூக பொருளாதார நடைமுறைகளை கையாளும் நேர்த்தியான முறையை கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் குடியேறியவர்கள் ஒருங்கிணைந்து வாழ்வதை பற்றி குறைந்தபட்சம் அறிவாற்றல் கொண்டவர்கள், இலாப நோக்குடைய செயல்களில் மட்டும் ஈடுபட்டுள்ளனர்.”  
காபி, வாழை மற்றும் காய்கறி விவசாயிகளால் “அபாயகரமான” பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரசாயனங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை குறைக்க வழிவகுத்தது. “இதன் விளைவாக, வாழ்வாதார வாய்ப்புகளை தேடி பலியான் போன்ற அசல் குடியிருப்பாளர்கள்கூட சமவெளிகளுக்கு நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.” 

2006 ஆம் ஆண்டின் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம், ‘பிற பாரம்பரிய வனவாசிகள்’ என்பது குறைந்தபட்சம் மூன்று தலைமுறைகளுக்கு காடுகளில் வசிப்பவர்கள், ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள் என்பது அர்த்தமாகும். 2006 சட்டத்தின்படி தங்களை வனவாசிகள் என்று பட்டியலிட கொடைக்கானல், திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் கிராமங்களில் இருந்து 1,543 விண்ணப்பங்கள் அரசுக்கு வந்தது. ஆனால் பழங்குடியினரின் 329 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘பிற பாரம்பரிய வனவாசிகள்’ என்று அங்கீகரிக்க கோரிய 1,214 விண்ணப்பங்களை, ஆவணங்கள் வேண்டும் என்று நிராகரிக்கப்பட்டது. தனியார் எஸ்டேட்கள் மற்றும் அரசு நிலங்களிலிருந்த விலைமதிப்பற்ற சதுப்பு நிலப்பகுதிகள் வனவிலங்குகளுக்கான உணவு மற்றும் நீர்தேவையை பூர்த்தி செய்யும் பகுதியாக இருந்தது, படிப்படியாக ஏராளமாக ஆக்கிரமிக்கப்பட்டு வாழை போன்ற இலாபகரமான பயிர்களுடன் பயிரிடப்பட்டன. இதுவும் மனிதன்-விலங்குகள் இடையிலான மோதலுக்கு பிரதான காரணங்களில் ஒன்றானது.

இதுவே தடையை தாண்டியும் விளைநிலங்களுக்கு யானைகள் வருவதற்கு காரணமாகும். விவசாயிகளின் சூரியமின்சக்தி வேலிகள், யானை அகழிகள் மற்றும் விவசாயிகள் யானைகளை பயமுறுத்த பயன்படுத்தப்படும் மற்றவழக்கமான தடை நடவடிக்கையையும் மீறி விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைவதற்கு காரணமாகிறது. யானைகளை தடுத்து நிறுத்தும் உள்ளூர்வாசிகளின் அனைத்து வழிமுறைகளும் வெற்றியடைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் தீவனம் பயிர்களை உயர்த்த வனத்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் வனத்துறை பட்டியலிட்டுள்ளது.

 “வாழ்விடங்கள் துண்டாக்கப்பட்ட பகுதிகளில் தாழ்வானப்பகுதிகளை நோக்கிவராமல் காட்டு யானைகளின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்த முடியாதவை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வனத்துறையின் பதிலையடுத்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வனப்பகுதியில் உயிரியல் பன்முகத்தன்மையை பாதிக்காமல் தன்னுடைய முயற்சிகளை தொடரவேண்டும் என்று வனத்துறைக்கு உத்தரவிட்டது.