காஞ்சிபுரத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்

Read Time:52 Second

காஞ்சிபுரத்தில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக 18 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து வீணாகின.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரசு கொள்முதல் செய்திருந்த 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அங்கு பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் நனைந்து நாசமாகியுள்ளது. மூட்டைகளை தார்பாய் போட்டு பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்நிலைக்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.