மாணவர்களின் ஆர்வம் காரணமாக தமிழை கற்பிக்கும் சீனப் பல்கலைக்கழகம்!

Read Time:4 Minute, 44 Second

பெய்ஜிங்கில் உள்ள பிஎஃப்எஸ்யூ பல்கலைக்கழகம் மாணவர்களின் ஆர்வம் காரணமாகவே தமிழ் மொழியை கற்பிக்கிறது.

சீன தலைநகரில் உள்ள பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகம் ( பிஎஃப்எஸ்யூ) தமிழ் மொழியை 4 ஆண்டுகள் படிக்கும் பட்டப்படிப்பை கொண்டு வந்துள்ளது. இந்தி, பெங்கால் மொழிக்கு அடுத்தப்படியாக தமிழ் மொழியை பல்கலைக்கழகம் கற்பிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு படிப்பு தொடங்கியதுமே, தமிழ் மொழியை 10 மாணவர்கள் ஆர்வமாக கற்று வருகிறார்கள்.

தமிழை கற்றுவரும் மாணவி ஃபூ பேய் லின் பேசுகையில், “முதலிலே எனக்கு தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. உச்சரித்து பார்க்கவே தொடங்கிவிட்டேன். உண்மையிலே தமிழ் மொழியை கற்றுக்கொள்வது என்பது கடிமான ஒன்றாகும். ஆனால் மொழியின் ஒவ்வொரு சொல்களையும் சொல்லும் போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்கிறார்.

பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையின் தலைவர் ஈஸ்வரி என்ற ஜூ ஜின் பேசுகையில், “15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள தொடங்கிய முதல் நாளை எனக்கு இது நினைவூட்டியது. தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்,” என்கிறார். என்னுடைய மாணவர்களுடன் மேலும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவே விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களை பார்த்து மாணவர்கள் தமிழ் மொழியை தேர்வு செய்துள்ளனர். திங்கள் கிழமை முதல் வகுப்புக்கு வந்த மாணவர்கள் மிகவும் ஆர்வமாக காணப்பட்டனர். தமிழ் மொழியை 4 ஆண்டுகள் படிக்கும் அவர்கள் 6 முதல் 12 மாதங்கள் தமிழகத்திற்கும் வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் அதுதொடர்பான இடங்களை பார்வையிட வருகிறார்கள்.

இதுதொடர்பாக ஈஸ்வரி பேசுகையில், “மாணவர்கள் தமிழில் எழுதவும், பேசவும் கற்றுக்கொண்ட பின்னர் மூன்றாவது ஆண்டில் தமிழகத்திற்கு வருவார்கள்,” என்று கூறியுள்ளார். மாணவர்கள் தமிழ் மொழியுடன் சட்டம், பொருளாதாரம் போன்ற துணைப் பாடங்களையும் படித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுடைய முதன்மை பாடமாக தமிழ் உள்ளது.

2017 ஹார்வர்ட் தமிழ் தலைவர் மற்றும் தமிழ் ஆராய்ச்சி-இளைஞர் சங்கத்தின் சர்வதேச கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிசெல்வன் வீடியோவுடன் முதல் வகுப்பை தொடங்கியுள்ளனர் மாணவர்கள். மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வெற்றிசெல்வன், அவர்களுக்கு தமிழ் மொழியின் மேண்மை குறித்து பேசியுள்ளார். இதுபோன்று பிற புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களும் அவர்களுடன் வீடியோவில் பேசியுள்ளனர்.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள வெற்றிசெல்வன் பேசுகையில், சீனாவில் சில உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ் கற்பித்தல் தொடங்கப்பட்டாலும், அவைகள் பிஎஃப்எஸ்யூ போன்று அதனை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததால் கைவிடப்பட்டது. இப்போது தமிழக முதன்மை பாடமாக கொண்ட படிப்பு, ஒரு வரவேற்புக்கான அடையாளமாகும். உலகளாவிய அளவில் பொருளாதார சரிவு இருந்த போதிலும் இந்திய பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். எனவே எந்தவொரு இந்திய மொழியையும் தெரிந்துகொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு உதவும் என கூறியுள்ளார்.

ஈஸ்வரி பேசுகையில், தமிழ் படிக்கும் மாணவர்கள் வணிகம், மீடியா மற்றும் மொழியை கற்பித்தல் போன்ற துறைகளில் தங்களுடைய திறன்களை பயன்படுத்த முடியும். சீனாவில் தமிழ் மொழி ஆராய்ச்சிகளுக்கு கருவியாக இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.