மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை!

Read Time:2 Minute, 7 Second

மதுரை ஏய்மஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டியில் 197 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

இதையடுத்து அங்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் மதுரை ஏய்மஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த விழிப்பு உணர்வு அறக்கட்டளை சார்பில் ஹக்கிம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ. RTI) மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. எய்ம்ஸ் அமைக்க நிதி ஒதுக்கவில்லை, அதே போல எந்த வித கட்டுமான நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அமைச்சருடன் நேரில் சந்திப்பு

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “எய்ம்ஸ் மருத்துவமனை அமைய படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் எந்தத் தடையும், மாற்றமும் இல்லை. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உடன் நானும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.