விஐபிகள் பயணம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1,146 கோடி கட்டண பாக்கி

Read Time:1 Minute, 48 Second

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் என விஐபிகள் பயணத்துக்காக ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ. 1,146 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது.

லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலமாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் இது தொடர்பாக தகவல்களை பெற்றுள்ளார்.

நஷ்டத்தில் இயங்குகிற பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவிற்கு மத்திய அரசே ரூ.1,146 கோடி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுக்கு பாதுகாப்பு கருதி தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். இவ்வகையான பயணத்துக்கு ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ. 1,146 கோடி கட்டண பாக்கி செலுத்த வேண்டும் என்று தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் ரூ.211.17 கோடி, மத்திய மந்திரிசபை செயலகமும், பிரதமர் அலுவலகமும் ரூ.543.18 கோடி, வெளியுறவுத்துறை அமைச்சகம் ரூ.392.33 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016–ம் ஆண்டு சிஏஜி அறிக்கையிலும் மத்திய அரசு விமான கட்டண பாக்கி வைத்துள்ள பிரச்சினை குறிப்பிட்டு காட்டப்பட்டது. கடன் சுமையில் சிக்கிதவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.