கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, வைரலாகும் வைரமுத்து! சின்மயி காட்டம்…

Read Time:10 Minute, 23 Second

7 முறை தேசிய விருது வாங்கிய வைரமுத்து பாலியல் ரீதியாக எவ்வாறு தொல்லைகளை கொடுத்தார் என்பதை பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். தன்னை சந்திக்கவந்த பெண்களிடம் காம பார்வையில் தவறாக நடந்துக்கொண்டது தொடர்பான தகவல்கள் அனைத்தும் பொது வெளிக்கு வந்துள்ளது. பணி இடங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் பாலியல் துஷ்பிரயேகங்களை #MeToo என்ற பிரசாரத்தின் மூலம் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

ஆந்திராவில் நடிகை ஸ்ரீரெட்டி தான் எப்படி பாலியல் ரீதியாக சினிமாத்துறையில் சுரண்டப்பட்டேன் என்பதை வெளிப்படுத்தினார்.

இந்தியாவில் #MeToo பிரசாரத்திற்கு போதுமான வெளிப்பாடு உடனடியாக வெளியாகவில்லை. பெண்கள் நெருங்கிய தோழிகளிடம் தெரிவிப்பதுடன், வெளியே தெரிவிக்காமலே இருந்தனர். இந்நிலையில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடத்தி இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகாரை தெரிவித்தார். இதனையடுத்து இவ்வரிசையில் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேரிட்ட சம்பவங்களை வெளியிட்டு வருகிறார்கள். இது திரையுலகில் தவறு செய்தவர்களின் வயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே பத்திரிக்கையாளர்களும் இப்பிரசாரத்தை ஸ்திரமாக வெளிக்கொண்டு வந்துள்ளனர். இந்தியாவில் பத்திரிக்கை துறையில் மூத்த அதிகாரிகளால் எப்படி பாலியல் தொல்லைக்கு உள்ளானோம் என்பதை பெண் செய்தியாளர்களும் வெளிப்படுத்தி வருகிறார். இன்னும் இப்பிரசாரம் தீவிரமடைய வேண்டும், ஸ்திரமான நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வைரமுத்து

பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லை காரணமாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய நிலையில் மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சினிமா துறையிலும், அரசியலிலும், பொதுவெளியிலும் தனக்கென்று ஒரு தனிப்பெரும் இடத்தை கொண்டுள்ள வைரமுத்துவின் காம பார்வை தொடர்பான செய்திதான் வெளியாகியுள்ளது.

நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாடலாசிரியர் வைரமுத்து பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் முன்வைத்து உள்ளார்கள். இவ்வரிசை நீண்டு செல்வதும், அதற்கு திரையுலகில் இருந்தே ஆதரவு தெரிவிக்கப்படுவது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக இருக்கிறது.

வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்தார்

வைரமுத்துவின் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாடை முன்வைத்து உள்ளார். இதனை பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். “எனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். தேசிய விருது பெற்றவர், மதிப்பிற்குரியவர் என்ற நம்பிக்கையில் சென்ற போது இந்த சம்பவம் நேரிட்டது. கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, அவருடன் பணியாற்றி கொண்டிருந்த போது, திடீரென என்னை வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

அதைத்தொடர்ந்து, நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இருக்கும் அறையில் தனியாக இருக்கவே எனக்கு நடுக்கமாக இருக்கும். பணியின் காரணமாக அப்படி ஒரே அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், எப்போதுமே நிறைய பேர் இருக்கும்போது மட்டுமே செல்வேன். வைரமுத்து பாலியல் ரீதியாக பெண்களை சீண்டுபவர் என்பது சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பாதிக்கப்பட்ட பெண்களை அடக்கி விடுவதால், யாருமே அவரை எதிர்ப்பதில்லை. இது எனக்கு நடந்தது. அது தான் உண்மை. எனது பெயரை வெளியில் கூற நான் விரும்பவில்லை” இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கல்லூரி மாணவியும் புகார்

கல்லூரில் படிக்கும் மாணவி ஒருவர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பான தகவலையும் சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

“என்னுடைய பணியை பாராட்டி வைரமுத்துவிடமிருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். என் தாத்தாவின் வயது இருக்கும் அவர், கதவை பூட்டி என்னை பாலியல் ரீதியாக அணுகினார். சுதாரித்துக்கொண்ட நான் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டேன். சில நாட்கள் கழித்து என்னை மீண்டும் தொடர்பு கொண்ட வைரமுத்து, தன் மனைவியிடம் இந்த விவகாரம் பற்றி சொல்ல வேண்டாம் என்று வேண்டினார். நானும் சொல்லவில்லை. என் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை கூறுகிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்” என்று அந்த பதிவில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சின்மயி காட்டம்

இதுபோன்ற சூழ்நிலையை தானும் எதிர்க்கொண்டதாக பிரபல பாடகி சின்மயி கூறியுள்ளார்.

ஆரம்ப காலங்களில் இருந்தே திரையுலகில் பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை வெளியிட்டு வரும் சினமயி, இப்போது அடுக்கடுக்கான தகவல்களை வெளியிட்டு வருகிறார். வைரமுத்து மீதான குற்றச்சாட்டை உண்மை என்று பதிவுகளை ரிடுவிட் செய்து வருகிறார். வைரமுத்து இப்படிதான் என்பது திரையுலகில் உள்ளவர்களுக்கும் தெரியும், அவருடைய அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும் என ஸ்திரமாக குறிப்பிட்டுள்ளார் சின்மயி. இப்போதைய அவருடைய நகர்வு மிகவும் ஆபத்தான விளைவுகளை எதிர்க்கொள்ள செய்யும் என்ற எச்சரிக்கைகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

2005 அல்லது 2006-ம் ஆண்டாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்காக சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வீடு திரும்பிய போது என்னையும், என்னுடய தாயாரையும் மட்டும் அனுமதிக்கவில்லை. அப்போது ஓட்டலில் இருக்கும் வைரமுத்துவை சந்திக்க சொன்னார்கள். மாட்டேன் என்றும் பெரும் விளைவை எதிர்க்கொள்ள வேண்டியது வரும் என எச்சரிக்கை விடுத்தார்கள். பின்னர் எங்களுக்கு அப்படிஒரு வாழ்க்கையும் வேண்டாம், மண்ணும் வேண்டாம் என கூறிவிட்டு இந்தியா திரும்பினோம் என பதிவிட்டுள்ளார்.

3, 4 வருடங்களுக்கு முன்னதாக வைரமுத்துவின் நிகழ்ச்சியொன்றில் தமிழ்தாய் வாழ்த்து பாட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அரசியல் பின்புலத்தை காட்டி மிரட்டியதாகவும் சின்மயி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுபோன்று வைரமுத்துவால் நேரிட்ட பாதிப்பு என்ன என்பதையும் வரிசையாக வெளியிட்டு வருகிறார். இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை என சின்மயி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மண்டியிடுவாரா?

வைரமுத்து பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழகமே கொந்தளித்து. அப்போது மழுப்பிய வைரமுத்துவின் மீது பெண்கள் பாலியல் புகாரை கூறிவருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் வைரமுத்துவை கோபத்துடன் திட்டி வருகின்றனர். இப்போது நீங்கள் யோக்கியமா? மண்டியிட்டு மன்னிப்பு கேட்பீர்களா? என கேள்விகளை அடுக்கி வருகிறார்கள்.