பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன? பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தவிர்ப்பது எப்படி?

Read Time:6 Minute, 1 Second

உங்களை சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் மதிக்கும் கெளரவமான மனிதராக இருங்கள் என்பதுதான் ஒரு வரியிலான பதிலாகும்.

ஹாலிவுட் திரையுலகில் எதிர்க்கொண்ட பாலியல் தொல்லைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் நடிகைகள் ‘மீடூ’ #MeToo இயக்கத்தை சமூக வலைதளங்களில் தொடங்கினர். 2017 அக்டோபரில் ஹாலிவுட்டில் தொடங்கிய புயல் இப்போது இந்தியாவில் மையம் கொண்டுள்ளது. பாலிவுட்டில் பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவது கிடையாது என்ற குற்றச்சாட்டுக்கள் வெளியாகியது. இந்நிலையில் பிரபல நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்ததும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனையடுத்து பத்திரிக்கையுலகில் இருந்தும் பெண்கள் தங்களுக்கு நேரிட்ட சம்பவங்களை பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதில் மத்திய அமைச்சரும் சிக்கியுள்ளார் என்பதுதான் வியப்புக்குரியது. பிரபல பத்திரிக்கையாளர்களாக இருந்து, பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார்கள். #MeToo புயல் தமிழ் திரையுலகிலும் மையம் கொண்டுள்ளது.

‘மீ டூ’ #MeToo பாலியல் புகாரை விசாரிக்க குழு, மத்திய அரசு திட்டம்

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களுக்கு நேரிட்ட சம்பவங்களை பதிவிடும் போது பதில் தெரிவிப்பவர்கள் “பொய், பொய், பொய்” என்று முத்திரையிடுவதும் தொடர்ந்து வருகிறது. இப்படி பொய் என்று பதிவிடுவதற்கு பதிலாக பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவது அவசியமானது. இதை தெரிந்துக்கொள்வது மிகவும் உதவிக்கரமானது.

எந்தவொரு விரும்பத்தகாத பாலியல் செயலும் பாலியல் துன்புறுத்தலாகும்; ஒருவரை சங்கடமான நிலைக்கு தள்ளுவதாகும்.

வார்த்தைகளில் துன்புறுத்தல்: ஒருவரை குறிப்பிட்டு பாலியல்ரீதியாகவும், கேலிசெய்யும் வகையிலும் நகைச்சுவைகளை பயன்படுத்துதல்; ஆபாசமான வீடியோ அழைப்புக்கள்; பெண் ஒருவரின் ‘கேரக்டர்’ பற்றிய வதந்திகளை பரப்புதல்; மற்றும் இதுபோன்ற விஷங்கள் அனைத்தும் அடங்கும்.

வார்த்தையல்லாத துன்புறுத்தல்: வார்த்தையல்லாத துன்புறுத்தல் விஷயங்கள் என்பது வரம்புகளை உள்ளடக்கியது. யாரோ ஒருவருடன் பேசும் போது அவர்களுடைய மாபகங்களை பார்ப்பது; கீழ்த்தரமான வாட்ஸ்-அப் மெசேஜ்களை அனுப்புதல் போன்றவையாகும்; பாலியல் ரீதியிலான விரும்பமில்லா இ-மெயில்களை அனுப்புதல்; பஸ்களில் செல்லும் போது பெண்களை வீடியோ எடுப்பது போன்றவையாகும்.

உடல் ரீதியான துன்புறுத்தல்: இதனை எளிதாக புரிந்துக்கொள்ளலாம். ஒருவருடைய சம்மதம் இல்லாமல் அவரை தொடுவது மற்றும் உங்களுடைய உடல் பாகங்களை அவர்கள் மீது படச்செய்வது துன்புறுத்தலாகும்; ஒருவருடைய சம்மதம் இல்லாமல் அவருடைய கழுத்தை நுகர்வது துன்புறுத்தலாகும்; சம்மதமின்றி ஒருவருடைய கையை இறுக்கிப்படிப்பது துன்புறுத்தலாகும்; தூங்கும் போது பெண்ணின் வாய் மீது விரலை வைப்பதும் துன்புறுத்தலாகும். இதுவே பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் என்பது பணியிடங்களில், வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம்:

ஒன்றுக்கு பதில் மற்றொன்று: பணியிடத்தில் வேலை கிடைக்கவும், பதவி உயர்வு கிடைக்கவும் பாலியல் ரீதியாக இணக்கமாக இருக்குமாறு ஆண் ஒருவர் கேட்டுக்கொள்வது, மற்றும் இதுபோன்ற செயல்களாகும்.

பகைமையான பணிசூழல்: பாலியல் ரீதியாக இணக்கம் தெரிவிக்கவில்லை என்பதற்காக பெண்ணின் வாழ்க்கையை ஆண் ஒருவர் நரகமாக்குவது.

இவையனைத்தும் பாலியல் துன்புறுத்தல்தான்.

ஒருவர் துன்புறுத்தப்படுகிறார் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?

நீங்கள் செய்யும் செயலால் பெண் ஒருவர் சங்கடமான நிலையை உணர்வதாகும். உங்கள் எண்ணம் யாரையாவது தொந்தரவு செய்யக்கூடாது என்பது விஷயம் கிடையாது. பிறருக்கு தொல்லை கொடுக்கிறமோ என்பதை 5 வயது குழந்தையால் கூட உணர்ந்துக்கொள்ள முடியும், இதனை பெரியவர்களிடமும் எதிர்பார்க்கலாம். பெண்களை நீங்கள் மகளாக நினைக்கிறீர்கள், சகோதரியாக நினைக்கிறீர்கள் அல்லது உங்களுடைய உறவுமுறையில் ஏதாவது ஒன்றாக நினைக்கிறீர்கள் என்பது எல்லாம் விஷயம் கிடையாது. உங்களுடைய நடவடிக்கைதான் இதில் விஷயமாகும். எனவே இதுபோன்றவாராக இருக்காது; உங்களை சரிசெய்து, இந்த உலகத்தை அனைவருக்கும் பாதுகாப்பானதாக்குவோம். நன்றி:- தி நியூஸ் மினிட்