5 மாநில தேர்தல் முடிவுகள் விபரம்;-

Read Time:2 Minute, 38 Second

5 மாநில பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன. ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆளும் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, பா.ஜனதா 109 இடங்களில் வென்றுள்ளது.

மத்திய பிரதேசம் முடிவு:

காங்கிரஸ் – 114
பா.ஜனதா – 109
பகுஜன் சமாஜ் – 2
சமாஜ்வாடி – 1
சுயேட்சை – 4

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க மெஜாரிட்டி எண்ணிக்கை 116 ஆகும். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவை தெரிவித்துள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியமைக்க வழி ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முடிவு:

காங்கிரஸ் கூட்டணி – 100
பா.ஜனதா – 73
மற்றவை – 26 (இதில் சுயேட்சைகள் மட்டும் 13)

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டி எண்ணிக்கை 101 ஆகும். காங்கிரசுக்கு சுயேட்சைகள் ஆதரவை தெரிவித்துள்ளனர். மாயாவதியின் கட்சியும் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சியமைக்க தடைகிடையாது.

சத்தீஷ்கார் முடிவு

காங்கிரஸ் – 68
பா.ஜனதா – 15
மற்றவை – 7

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில ஆட்சியமைக்க வேண்டிய மெஜாரிட்டி எண்ணிக்கை 46ஐ தாண்டி காங்கிரஸ் அமோக வெற்றியை தனதாக்கியுள்ளது.

தெலுங்கானா முடிவு

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி – 88
காங்கிரஸ் – 19
பா.ஜனதா – 1
மற்றவை – 7

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் 60 தொகுதிகளை தாண்டி போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சியை தக்கவைத்தது.

மிசோரம் முடிவு

மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணியிடம் ஆட்சியை இழந்துள்ளது.

மிசோ தேசிய முன்னணி – 26
காங்கிரஸ் – 5
சுயேட்சைகள் – 8
பா.ஜனதா – 1