‘இந்தியன் 2’ வர்மக்கலைகள் கற்கும் காஜல் அகர்வால்!

‘இந்தியன் 2’ படத்தில் நடிப்பதற்காக வர்மக்கலைகளை காஜல் அகர்வால் கற்று வருகிறார்.

கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் இந்தியன் 1996-ல் வெளியானது. படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கருவை கொண்டது. கமல்ஹாசன் இளமையாகவும், வயதான இந்தியன் தாத்தாவாகவும் இரு வேடங்களில் வந்தார். இந்த படம்தான் கமல் – ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தேர்வாகவில்லை. என்றாலும் 3 தேசிய விருதுகளை வென்றது. கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இந்த படத்தில் கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் சுபாஷ் சந்திரபோசை மையமாக வைத்து உருவாக்கியதாக கூறப்பட்டது.

லஞ்ச ஊழல் பேர்வழிகளை இந்தியன் தாத்தாவாக வரும் கமல் கைவிரல்களை சுழற்றி வர்ம அடி கொடுத்து வீழ்த்தும் காட்சிக்கு இன்றும் மவுசு குறையவில்லை. இந்தியன் கிளைமாக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள். ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர்.

இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறியுள்ளார். 2.0 படத்தைபோல் இந்தியன்–2 படத்தையும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்க ‌ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதானவர்போல் மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் கதாபாத்திரத்துக்கு வர்மக்கலைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இதற்காக, தற்போது வர்மக்கலைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்று வருகிறார் காஜல் அகர்வால். டிசம்பர் மாதம் துவங்குவதாக இருந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு, 2019-ல் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 22 வருடங்கள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமல் – ஷங்கர் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Next Post

'உலக சாம்பியன் பட்டம்' வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து

Sun Dec 16 , 2018
Share on Facebook Tweet it Pin it Share it Email ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை பி.வி.சிந்து படைத்தார். ‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்தது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை […]

அதிகம் வாசிக்கப்பட்டவை