பிரதமர் மோடி வெளியிட்ட 100 ரூபாய் நாணயம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை…

Read Time:1 Minute, 42 Second

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக பிரதமர் மோடி, அவரது உருவம் பொறித்த ரூ. 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் வாஜ்பாய் நினைவை போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் சுமிதா மகாஜன், நிதியமைச்சர் அருண்ஜெட்லி, கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

* புதிய 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாயின் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. தேவநாகரி மற்றும் ஆங்கில எழுத்தில் அவருடைய பெயர் மற்றும் வாழ்ந்த காலம் 1924-2018 என்று பொறிக்கப்பட்டுள்ளது.

* மற்றொரு பக்கம் அசோக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. சிங்கமுகம் கொண்ட சின்னத்தின் மத்தியில் “சத்தியமேவ ஜெயதே” என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் 100 ரூபாய் என்று பொறிக்கப்பட்டுள்ளது. தேவநாகரி மற்றும் ஆங்கில எழுத்தில் இந்தியா என பொறிக்கப்பட்டுள்ளது.

* 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம் 50 சதவிதம் வெள்ளி, 40 சதவிதம் காப்பர், 5 சதவிதம் நிக்கல் மற்றும் 5 சதவிதம் ஜின்க்கால் உருவாக்கப்பட்டுள்ளது.